Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோவையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார்

கோவையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார்


நெய்வேலியில்  1000 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் திட்டம் மற்றும்  என்எல்சிஐஎல் நிறுவனத்தின் 709 மெகா வாட் சூரிய மின் சக்தி திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அர்ப்பணித்தார்.    

..சிதம்பரனார் துறைமுகத்தில்  5 மெகா வாட் திறனில்  மின் தொகுப்பு அமைப்பது மற்றும் கீழ் பவானி கால்வாய் திட்டத்தை  விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், நெல்லை, மற்றும் தூத்துக்குடி உட்பட 9 ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல்  நாட்டினார்.

..சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலம் மற்றும் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளையும்  பிரதமர் திறந்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கோவை தொழில் மற்றும் புதுமை கண்டுபிடிப்புக்கான நகரம் என கூறினார்இன்று தொடங்கப்பட்ட வளர்ச்சி பணிகள் கோவை மற்றும் ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் பயனளிக்கும் என அவர் கூறினார்.

பவானி சாகர் அணை நவீனமயமாக்கம், 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கும் நீர் பாசன வசதி அளிக்கும் என்றும், இத்திட்டம் மூலம் பல மாவட்ட விவசாயிகள் பயனடைவர் என்றும் பிரதமர் கூறினார்

இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு, மிகப் பெரியளவில் பங்களிப்பை அளிப்பதற்காக அவர் தமிழகத்தை பாராட்டினார்தொழில் துறை வளர்ச்சிக்கு, தொடர்ச்சியான மின் விநியோகம் அடிப்படை தேவை என்பதால், பல முக்கிய மின் திட்டங்களை தொடங்கி வைப்பதில் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

709 மெகா வாட் சூரிய மின் சக்தி திட்டம், ரூ.3,000 கோடி செலவில் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில்  உருவாக்கப்பட்ட திட்டம் என அவர் கூறினார்

ரூ.7,800 கோடி செலவில் 1000 மெகா வாட் திறனில் கட்டப்பட்ட மற்றொரு அனல் மின் திட்டம், தமிழகத்துக்கு மிகுந்த பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 65 சதவீதத்துக்கும் மேல் தமிழகத்துக்கு வழங்கப்படும் என அவர் கூறினார்.

தூத்துக்குடி ..சிதம்பரனார் துறைமுகம் தொடர்பான பல திட்டங்களை பிரமதர் தொடங்கி வைத்தார்கடல் வர்த்தகம் மற்றும் துறைமுகம் மூலமான வளர்ச்சியில்  புகழ்பெற்ற வரலாற்றை தமிழகம் கொண்டுள்ளது என அவர் கூறினார். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள், துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை மேலும் வலுப்படுத்தும் மற்றும் பசுமை துறைமுக முயற்சிக்கு உதவும்.

திறமையான துறைமுகங்கள்இந்தியா தற்சார்புடையதாக இருக்க உதவும்வர்த்தகம் மற்றும் சரக்குகள் கையாள்வதில் உலகளாவிய மையமாக இருக்கும் என்றும்அவர் குறிப்பிட்டார்.

மிகச் சிறந்த சுதந்திர போராட்ட வீரர் ..சிக்கு  திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.   ‘‘வலுவான இந்திய கப்பல் போக்குவரத்து துறை மற்றும் கடல்சார் வளர்ச்சிக்கு  ..சி.யின் தொலைநோக்கு நம்மை மிகவும் ஊக்குவிக்கிறது’’  என பிரதமர் கூறினார்.

..சி துறைமுகம் 5 மெகா வாட் திறனுடன் கூடிய சூரிய மின்சக்தி நிலையத்தை ரூ.20 கோடி செலவில் அமைத்ததற்கும், 140 கிலோ வாட் திறனுள்ள மேற்கூரை சூரிய மின்சக்தி திட்ட பணிகளை மேற்கொண்டு வருவதற்கும் பிரதமர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்இது தற்சார்பு மின்சக்தி திட்டத்துக்கு சிறந்த உதாரணம் என அவர் கூறினார்

துறைமுகம் மூலமான வளர்ச்சியில் இந்தியாவின் உறுதியை, சாகர்மாலா திட்டம் மூலம் காண முடியும் என பிரதமர் வலியுறுத்தி கூறினார்.

2015- 2035ம் ஆண்டு காலத்தில் ரூ.6 லட்சம் கோடிக்கு மேலான செலவில், அமல்படுத்த 575 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

துறைமுகம் நவீனமயமாக்கம், புதிய துறைமுகம் உருவாக்கம், துறைமுக இணைப்பு அதிகரிப்பு, துறைமுகம் தொடர்பான தொழில்மயமாக்கம் மற்றும் கடலோர சமூக மேம்பாடு ஆகியவை இந்த பணிகள் என பிரதமர் தெரிவித்தார்

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேடு பகுதியில்  புதிய பல்நோக்கு சரக்கு பூங்கா விரைவில் தொடங்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.  

சாகர்மாலா திட்டத்தின் கீழ், கோரம்பள்ளம் 8-வழி பாலம் மற்றும் ரயில்வே மேம்பாலம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

இத்திட்டம்  துறைமுகத்துக்கு தடையற்ற போக்குவரத்து வசதியை வழங்கும். இது லாரிகளின் போக்குவரத்து  நேரத்தை மேலும் குறைக்கும் என திரு நரேந்திர மோடி கூறினார்.

தனிநபரின் கவுரவத்தை உறுதி செய்வதுதான் வளர்ச்சியின் முக்கியமான அம்சம் என திரு. நரேந்திர மோடி கூறினார்.  ‘‘கவுரவத்தை உறுதிசெய்யும் அடிப்படையான வழிகளில் ஒன்று, ஒருவருக்கு இருப்பிடத்தை வழங்குதல்.

நமது மக்களின் கனவுகளை நனவாக்க, பிரதமரின் வீட்டு வசதி திட்டம் தொடங்கப்பட்டது’’ என அவர் கூறினார்பலபகுதிகளில் 4,144 குடியிருப்புகளை தொடங்கி வைத்ததிலும், தமிழகம் முழுவதும் உள்ள ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டியதற்கும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் செலவு ரூ.332 கோடி என்றும், இந்த வீடுகள் 70 ஆண்டு சுதந்திரத்துக்கு பின்பும் வீடு இல்லாதவர்களுக்கு  வழங்கப்படும் என அவர் கூறினார்.  

ஸ்மார்ட் நகரங்களில் பல சேவைகளை நிர்வகிக்க ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள்புத்திசாலித்தனமான மற்றும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் என்றும் பிரதமர்  கூறினார்.

 

—–