Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோலாப்பூர் அரச குடும்பத்தின் பெருமை குறித்து திரு. தியானேஸ்வர் முலே மிகச் சிறந்த கட்டுரை எழுதியுள்ளார்: பிரதமர்


கோலாப்பூர் அரச குடும்பம், தொலைநோக்குப் பார்வை கொண்ட பேரரசர்கள் மற்றும் மகாராணி தாராபாய் ஆகியோரின் பெருமைகள் குறித்து திரு. தியானேஸ்வர் முலே மிகச் சிறந்த கட்டுரையை எழுதியுள்ளார் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார். அவர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த கருணை உணர்வு வரும் தலைமுறையினருக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் என்று திரு மோடி கூறினார்.

கோலாப்பூரைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளரான திரு தியானேஸ்வர் முலே, மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் நகரம் மற்றும் போலந்து  இடையேயான நம்பமுடியாத தொடர்பின் கதையைப் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

திரு. தியானேஸ்வர் முலே எழுதிய கட்டுரைக்கு பதிலளிக்கும் வகையில்  சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“கோலாப்பூர் அரச குடும்பம்,  பேரரசர்கள் மற்றும் மகாராணி தாராபாய் ஆகியோரின் பெருமை குறித்து திரு  தியானேஸ்வர் முலே மிகச் சிறந்த கட்டுரையை எழுதியிருக்கிறார். அவர்களின் ஒப்பற்ற கருணை உணர்வு வரும் தலைமுறையினருக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கும். @navnirmiti”

BR/KR

 

***