Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோரக்பூர், சிந்திரி, பரோனி ஆகிய இடங்களில் உள்ள செயல்படாத உரத் தொழிற்சாலைகளைப் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


கோரக்பூர், சிந்திரி, பரோனி ஆகிய இடங்களில் உள்ள செயல்படாத உரத் தொழிற்சாலைகளைப் புதுப்பிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் இந்திய உரக்கழகத்துக்கு சொந்தமான ஜார்க்கண்ட் மாநிலம் சிந்திரி, உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ஆகிய இடங்களில் உள்ள மூடப்பட்ட 2 யூரியா தொழிற்சாலைகள், இந்துஸ்தான் உரக்கழகத்துக்கு சொந்தமான யூரியா தொழிற்சாலை ஆகியன அடங்கும்.
இந்த 3 தொழிற்சாலைகளும் சிறப்பு நோக்க நிதியங்கள் மூலம் புதுப்பிக்கப்படும். பொதுத்துறை நிறுவனங்களான தேசிய அனல் மின்கழகம், இந்திய நிலக்கரி நிறுவனம், இந்திய எண்ணைக் கழகம் மற்றும் இந்திய உரக் கழகம் / இந்துஸ்தான் உரக்கழகம் ஆகியவற்றின் மூலமான நாமிநேஷன் மார்க்கத்தில் இந்த நிதியங்கள் செயல்படுத்தப்படும்.

கோரக்பூர், சிந்திரி, பரோனி ஆகிய இடங்களில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதால் பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் பகுதிகளின் வளர்ந்து வரும் யூரியா உரத் தேவை நிறைவு செய்யப்படும். மேலும் மேற்கத்திய, மத்திய மண்டலங்களிலிருந்து யூரியாவை நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்வதற்கான ரெயில் போக்குவரத்து, சாலைப்போக்குவரத்து வசதிகள் மீதான தாக்கம் குறைந்து மத்திய அரசின் சரக்குப் போக்குவரத்து மானியத் தொகைகளை மிச்சப்படுத்தும். அதனை அடுத்து சம்மந்தப்பட்ட பகுதிகளின் பொருளாதார மேம்பாட்டை விரைவு படுத்தவும் இது உதவும். மண்டலப் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன் இந்த்த் தொழிற்சாலைகள் 1200 நேரடி மற்றும் 4500 மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
கெயில் நிறுவனம் ஜகதீஸ்பூரிலிருந்து ஹால்டியாவுக்கு வாயுக் குழாய்ப்பாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய தொழிற்சாலைகள் இந்தக் குழாய்த் திட்டத்துக்கு நிலையான வாடிக்கையாளர்களாக இருந்து அதன் லாபத் தன்மையை உறுதிப்படுத்தும். ஜகதீஸ்பூர் – ஹால்டியா வாயுக் குழாய்ப்பாதைத் திட்டம் கிழக்கு இந்தியாவின் மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமான அடிப்படை வசதியாகும். இதனால் இந்த மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சி பல வகைகளில் மேம்படும்.

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு யூரியாத் துறைக்கான வாயு குழுமம் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த்த் தொழிற்சாலைகள் புதுப்பிக்க படும்போது அவற்றிற்கு குழும விலைகளில் எரிவாயு கிடைக்க இது உதவும். இதனை அடுத்து இந்தத் தொழிற்சாலைகள் உலக அளவில் போட்டியிடும் திறனைப் பெற்றுவிடும்.

பின்னணி

1990 – 2002 ஆண்டுகளில் இந்த ஆலைகள் மூடப்பட்ட பிறகு செயல்படாமலேயே தொடர்ந்து இருக்கின்றன. இதனால் இந்த தொழிற்சாலை மற்றும் அது சார்ந்த வசதிகள் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன. நாட்டின் கிழக்குப் பகுதியில் அசாம் மாநிலம் நாம்ரூப் – ல் உள்ள 2 சிறிய யூரியாத் தொழிற்சாலைகள் நீங்கலாக வேறு எந்த செயல் நிலை யூரியாத் தொழிற்சாலையும் இல்லை. முன்னதாக 2015 – ல் இந்த 3 ஆலைகளைப் புதுப்பிக்க ஏல அடிப்படைத் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்திருந்தது. எனினும் ஏல நடைமுறையை முன்னெடுத்துச் செல்ல இயலவில்லை. கோரக்பூர், சிந்திரி, புதுப்பிப்புக்கு என ஒரே ஒரு மனு மட்டுமே கிடைக்கப் பெற்றதால் ஏல நடைமுறை நின்று போனது.

நாட்டின் ஆண்டு யூரியா பயன்பாடு சுமார் 320 லட்சம் மெட்ரிக் டன். இதில் 245 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. எஞ்சிய தேவைக்கு இறக்குமதி மேற்கொள்ளப்படுகிறது. உள்நாட்டு யூரியா உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முன்னதாக ஒடிசா மாநிலம் தால்சேர், தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் தொழிற்சாலைகளை நாமினேஷன் மார்க்கமாக புதுப்பிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்த்து.