Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோரக்பூர், சிந்திரி உர ஆலைகள் மீண்டும் செயல்பட நில குத்தகை ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்காணும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது:

  • இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்துக்கு (Hindustan Urvarak & Rasayan Limited -HURL) குத்தகை அடிப்படையில் நில ஒதுக்கீடு செய்தல்;e
  • உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர், ஜார்க்கண்ட் மாநிலம் சிந்திரி ஆகிய இடங்களில் உள்ள இந்திய உரக் கழகத்தின் (Fertilizer Corporation of India Limited – FCIL) ஆலைப் பிரிவுகளுக்கும், பரோனியில் இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் (HURL) நடத்தும் இந்துஸ்தான் உரக் கழகம் (Hindustan Fertilizer Corporation Limited – HFCL)  ஆகியவை மீண்டும் செயல்படுவதற்கு சலுகையும் நிலக் குத்தகையும் அளிக்க வகை செய்தல்;
  • இந்த மூன்று ஆலைப் பிரிவுகளுக்காக இந்திய உரக் கழகம், இந்துஸ்தான் உரக் கழகம் மற்றும் இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் ஏதேனும் மாற்று ஒப்பந்தங்களும் இதர ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வேண்டுமானால், அவற்றுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை அமைச்சகங்கள் கமிட்டிக்கு (Inter-Ministerial Committee) அளித்தல்.

 

விளைவு:

கோரக்பூர், சிந்திரி, பரோனி ஆகிய இடங்களில் உள்ள இந்திய உரக் கழகம் (FCIL), இந்துஸ்தான் உரக் கழகம் (HFCL) ஆகியவற்றின் பிரிவுகள் மீண்டும் இயங்குவது உரத் தொழிலில் போதிய முதலீட்டை உறுதி செய்யும். மேலும், கிழக்கு இந்திய மண்டலப் பகுதியின் முக்கியமான மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஜகதீஸ்பூர்ஹால்தியா குழாய் திட்டத்துக்கு (JHPL) பெருமளவில் ஆதரவாக  இருக்கும். இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும். கிழக்கு மண்டலப் பகுதியின் பொருளாதார மேம்பாட்டுக்கும் வழியேற்படும். அத்துடன், உள்நாட்டு யூரியா உற்பத்தி அதிகரிக்கும். அதனால், யூரியாவில் தற்சார்பு வலுப்படும்.

 

விவரங்கள்:

  • இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் (HURL) ஒரு கூட்டு நிறுவனம் ஆகும். இந்துஸ்தான் உரக் கழகம் (HFCL), தேசிய அனல் மின் கழகம் (NTPC), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), கோல் இந்தியா நிறுவனம் (CIL), இந்திய உரக் கழகம் (FCILஆகியவை இணைந்து 2016ம் ஆண்டு ஜூன் உருவாக்கிய நிறுவனம் ஆகும். இது கோரக்பூர், சிந்திரி, பரோனி ஆகிய இடங்களில் உரத் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்கச் செய்வதற்காக அமைக்கப்பட்டது.
  • இந்த மூன்று நகரங்களிலும் உர உற்பத்திப் பிரிவுகளை அமைத்து இயக்குவதற்காக இந்திய உரக் கழகம், இந்துஸ்தான் உரக் கழகம் ஆகியவற்றுடன் இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் குத்தகை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் 55 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்.
  • இந்த ஒப்பந்தங்களின்படி குத்தகைதாரரான இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் (HURL) குறைந்தபட்ச குத்தகை வாடகையாக ஆண்டுக்கு ஒரு லட்சத்தை இந்திய உரக் கழகம், இந்துஸ்தான் உரக் கழகம் ஆகியவற்றுக்கு வழங்கும்.
  • இதைப் போல் இந்திய உரக் கழகத்தின் சிந்திரி, கோரக்பூர், பரோனி உற்பத்திப் பிரிவுகளுக்கான மூன்று சலுகை ஒப்பந்தங்கள் இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயனம் நிறுவனத்துக்கும் இந்திய உரக் கழகம் இந்துஸ்தான் உரக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலும் ஏற்படுத்தப்படும். இதன்படி  இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் ஆலைகளை வடிவமைத்து, கட்டுமானம், கொள்முதல், சோதனைப் பிரிவுகள் ஆகியவற்றை அமைத்து, ஆலையைத் தொடங்கி இயக்கி பராமரிக்கும். இவற்றுடன் உற்பத்தியாகும் உரத்தை சந்தைப்படுத்தவும் செய்யும்.
  • மேற்கண்ட பிரிவுகளுக்கான கடனுதவி பெறுவது தொடர்பான ஆலோசனைக் குழுமத்தின் நடைமுறைகள் பூர்த்தியான பிறகு மேற்கண்ட நிறுவனங்களுக்கும் நிதியுதவி பெறுவோருக்கும் இடையில் மாற்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்.

****