Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோடை விடுமுறையை வளர்ச்சிக்கும், கற்றலுக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு இளம் மனங்களை பிரதமர் ஊக்குவிக்கிறார்


கோடை விடுமுறையைக் கொண்டாடுகின்ற நாடு முழுவதும் உள்ள இளம் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்த நேரத்தை மகிழ்ச்சிக்காகவும், கற்றலுக்காகவும், சொந்த வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்களவை உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யா சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:

“எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கவும் மற்றும் மகிழ்ச்சியான விடுமுறைக்காகவும் வாழ்த்துக்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் கூறியது போல, கோடை விடுமுறைகள் அனுபவிக்கவும், கற்றுக்கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. இதுபோன்ற முயற்சிகள் மகத்தானவை”.

***

(Release ID: 2117149)
TS/PKV/RR/SG