Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோடிக்கணக்கான இந்தியர்களின் எளிதான வாழ்க்கை, கண்ணியத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கிராம, நகர்ப்புறங்களில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டப்படும்: பிரதமர்


பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கிராம, நகர்ப்புறங்களில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்ட முடிவு செய்திருப்பது, நமது நாட்டின் வீட்டுவசதித் தேவைகளை பூர்த்தி செய்வதிலும், அனைத்து ஒவ்வொரு குடிமகனும் சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் வாழ்வதை உறுதி செய்வதிலும் அரசின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஊக்கம், கண்ணியம்!

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தவும், கிராம, நகர்ப்புறங்களில் கூடுதலாக 3 கோடி வீடுகளைக் கட்டவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவு நமது நாட்டின் வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், அனைத்து  குடிமகனும் சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் வாழ்வதை உறுதி செய்வதற்கும் அரசின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் விரிவாக்கம் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக நலனுக்கான எங்கள் அரசின் உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.

***

(Release ID: 2023872)

SMB/IR/AG/RR