பிகார் ஆளுநர் திரு பகு சௌஹான் அவர்களே, முதலமைச்சர் திரு நிதீஷ் குமார் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திரு பியூஷ் கோயல் அவர்களே, திரு ரவி சங்கர் பிரசாத் அவர்களே, திரு கிரிராஜ் சிங் அவர்களே, திரு நித்யானந்த் ராய் அவர்களே, திருமதி தேவஸ்ரீ சவுத்ரி அவர்களே, பிகார் துணை முதல்வர் திரு சுசில் குமார் மோடி அவர்களே,
மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் பிகாரைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளே, வணக்கம்.
நண்பர்களே,
பிகாரில் ரயில்வே தொடர்பில் புதிய வரலாறு உருவாக்கப் பட்டிருக்கிறது. கோசி மகாசேது மற்றும் கியூல் பாலம், மின்யமாக்கல் திட்டங்கள், ரயில்வேயில் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவித்தல், மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு டஜன் அளவிற்கான திட்டங்கள் உள்ளிட்ட ரூ.3000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் இன்று தொடங்கப் பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் பிகாரில் ரயில்வே தொடர்புகளை பலப்படுத்துவதாக மட்டுமின்றி, மேற்கு வங்கம் மற்றும் கிழக்குப் பகுதி மாநிலங்களுக்கு இடையிலான ரயில் தொடர்பையும் பலப்படுத்தும்.
பிகார் உள்ளிட்ட கிழக்குப் பகுதி மாநிலங்களில் ரயில் பயணிகளுக்குப் பயன்களை அளிக்கும் புதிய மற்றும் நவீன வசதிகளுக்காக, பிகார் மக்களுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். பிகாரில் குறுக்கும் நெடுக்குமாக பல ஆறுகள் ஓடுவதால் மாநிலத்தின் பல பகுதிகள் போக்குவரத்துத் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தன, ஆறுகளைச் சுற்றி வர அவர்கள் நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டியிருந்தது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் பாட்னா மற்றும் முங்கரில் பெரிய பாலங்கள் (மகாசேது) கட்டும் பணிகள் 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. இப்போது இந்த இரண்டு ரயில் பாலங்கள் தொடங்கப்படுவதன் மூலம், பிகாரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு இடையிலான பயணம் எளிதாக மாறுகிறது. வளர்ச்சிக்கான புதிய உந்துதலை இது அளிக்கும், குறிப்பாக வடக்கு பிகாருக்கு புதிய உந்துதல் அளிப்பதாக இருக்கும்.
எட்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தீவிர பூகம்பம் காரணமாக மிதிலா மற்றும் கோசி பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. கொரோனா போன்ற கொள்ளை நோய் பரவும் காலத்தில் இந்த இரு பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. குடிபெயர்ந்த தொழிலாளர்களின் கடின உழைப்பில் உருவான சுப்பாவுல் – அசன்புர் – குஃபா ரயில் பாதை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. பாலம் கட்டும் பணியிலும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். திரு. அடல் பிகாரி வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது 2003-ல் இத் திட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது திரு. நிதிஷ்குமார் ரயில்வே அமைச்சராக இருந்தார். மிதிலா மற்றும் கோசி பகுதி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் இத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுப்பாவுல் – அசன்புர் – குஃபா ரயில் பாதை பணி முடிக்கப்பட்டுள்ளது.
கோசி மகாபாலம் வழியாக சுபாவுல்-அசன்புர் இடையில் புதிய ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது. இதன் மூலம் சுபாவுல், அராரியா, சஹார்ஸா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். வடகிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மாற்று ரயில் வழித்தடமாகவும் இது அமையும். 300 கிலோ மீட்டர் தொலைவுக்கான பயணம், இந்த மகா பாலம் வந்த பிறகு 22 கிலோ மீட்டராகக் குறைந்துள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதியில் வணிகம் மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகும். பிகார் மக்களுக்கு இதனால் நேரமும் பணமும் மிச்சமாகும்.
கோசி மகா பாலத்தைப் போல, கியூல் ஆற்றின் மீதான புதிய ரயில் வழித்தடத்தில், எலெக்ட்ரானில் இன்டர்லாக் வசதியுடன் ஓடும் ரயில்கள், அந்த வழித்தடம் முழுவதிலும் ஒரு மணி நேரத்திற்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். ஹௌரா – தில்லி இடையே பிரதான பாதையில் ரயில்கள் பயண நெரிசலைக் குறைக்க எலெக்ட்ரானிக் இன்டர்லாக் வசதி உதவும். இதனால் தேவையில்லாத தாமதங்கள் தவிர்க்கப்படும். பயணம் பாதுகாப்பானதாக இருக்கும்.
புதிய இந்தியா என்ற உயர் விருப்ப நோக்கத்தின்படி இந்திய ரயில்வே துறையை உருவாக்க கடந்த 6 ஆண்டுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்சார்பு இந்தியா திட்டத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாகவும் இது இருக்கும். முன் எப்போதையும்விட இந்திய ரயில்வே அதிக தூய்மையாக உள்ளது. அகல ரயில் பாதை வழித்தடங்களில் ஆளில்லா லெவல் கிராசிங்குகள் மாற்றப்பட்டதை அடுத்து இந்திய ரயில்வே பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது. ரயில்களின் வேகம் அதிகரித்துள்ளது. வந்தே பாரத் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில்கள், தற்சார்பு மற்றும் நவீனத்துவத்தின் அடையாளச் சின்னங்களாக உள்ளன.
ரயில்வே நவீனமயமாக்கல் மூலம் அதிக பலன்களை பிகார் பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க, மாதேபுராவில் எலெக்ட்ரிக் லோகோ தொழிற்சாலையும், மர்ஹௌராவில் டீசல் லோகோ தொழிற்சாலையும் தொடங்கப்பட்டன. இந்த இரு திட்டங்களிலும் ஏறத்தாழ ரூ.44,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த – 12,000 குதிரை சக்தித் திறன் கொண்ட – மின்சார என்ஜின் பிகாரில் தயாரிக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து பிகார் மக்கள் பெருமைப்படுவார்கள். பிகாரின் முதலாவது ரயில் என்ஜின் தயாரிப்பு நிலையம் செயல்படத் தொடங்கிவிட்டது.
பிகாரில் 90 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டு காலத்தில் 3000 கிலோ மீட்டருக்கும் அதிகமாக தொலைவுக்கு பிகாரில் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 2014க்கு முந்தைய 5 ஆண்டுகளில் பிகாரில் 325 கிலோ மீட்டர் நீளத்துக்குப் புதிய ரயில் பாதைகள் தொடங்கப்பட்டன. 2014க்குப் பிந்தைய 5 ஆண்டு காலத்தில் 700 கிலோ மீட்டர் அளவுக்குப் புதிய ரயில் பாதைகள் தொடங்கப்பட்டன. இது முந்தைய காலத்தைவிட ஏறத்தாழ இரு மடங்கு ஆகும், இன்னும் ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு புதிய ரயில் பாதைகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன.
ஹாஜிபுர் – கோஸ்வர் – வைஷாலி ரில் பாதை தொடங்கப்படுவதால் டெல்லியும் பாட்னாவும் நேரடி ரயில் சேவை மூலம் இணைக்கப்படும். வைஷாலியில் சுற்றுலாவுக்கு அதிக உத்வேகம் கிடைக்க இது உதவும் என்பதுடன், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சரக்கு ரயில்களுக்கான தனி ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன, அதில் 250 கிலோ மீட்டர் தொலைவுக்கான பாதை பிகாரில் இருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவுபெற்றால், பயணிகள் ரயில்கள் தாமதம் ஆவது குறையும், சரக்கு ரயில்களின் காலதாமதமும் பெருமளவுக்குக் குறையும்.
கொரோனா நெருக்கடி காலத்திலும் ஓய்வின்றி உழைத்தமைக்காக ரயில்வே துறைக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன். குடிபெயர்ந்த தொழிலாளர்களை ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றதுடன், அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் ரயில்வே பெரும் பங்காற்றியுள்ளது. நாட்டின் முதலாவது கிசான் ரயில் பிகார் மற்றும் மகாராஷ்டிரா இடையே கொரோனா காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
முன்பு பிகாரில் ஒரு சில மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இருந்தன. இதனால் நோயாளிகளுக்கு நிறைய அசவுகரியங்கள் ஏற்பட்டன. அதிக மதிப்பெண்கள் பெற்றாலும், மருத்துவ படிப்புகளுக்காக பிகார் மாணவர்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இப்போது பிகாரில் 15க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கடந்த சில ஆண்டுகளில் உருவானவை. சில தினங்களுக்கு முன்பு தர்பாங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம், ஆயிரக்கணக்கான புதிய வேலைகள் உருவாக்கப்படும்.
வேளாண்மை சீர்திருத்தங்கள் விஷயத்தில் நேற்றைய நாள் நாட்டின் வரலாற்று முக்கியத்துவமான நாள் ஆகும். நமது விவசாயிகள் பலவிதமான கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கும் வேளாண்மை சீர்திருத்தங்கள் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காக விவசாயிகளுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன். தங்கள் விளைபொருட்களை விற்பதற்கான சுதந்திரம் இதன் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும். விவசாயிகளின் வருமானத்தில் பெரும் பகுதியை கமிஷனாக சம்பாதித்து வரும் இடைத்தரகர்களின் குறுக்கீடுகளில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள்.
வேளாண்மை சீர்திருத்தங்கள் மசோதா குறித்து பொய்களைப் பரப்பும் செயலில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. பல தசாப்த காலங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள், வேளாண்மை விஷயத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள். இப்போது சீர்திருத்தங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும், ஏ.பி.எம்.சி. சட்டத்தில் வேளாண்மை மார்க்கெட் விதிமுறைகள் திருத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தன. குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு அரசு வழங்காது என்ற குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன்.
குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலைகள் கிடைப்பதை அரசு உறுதி செய்யும், முன்பிருந்ததைப் போல அரசு கொள்முதல் தொடரும். புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்போது, விவசாயிகள் அறுவடை செய்து தங்கள் விளைபொருளை தாங்கள் விரும்பும் விலைக்கு நாட்டில் எந்தவொரு மார்க்கெட்டிலும் விற்க முடியும். ஏ.பி.எம்.சி. சட்டத்தின் கேட்டை உணர்ந்த காரணத்தால், பிகார் முதல்வர் இந்த மாநிலத்தில் அதை ரத்து செய்துவிட்டார். விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த பிரதமரின் கிசான் கல்யாண் யோஜ்னா, பிரதமரின் கிரிஷி சின்சாய் யோஜ்னா, வேம்பு தடவிய யூரியா, குளிர்பதனக் கிடங்கு நெட்வொர்க் உருவாக்கும் பணிகள், உணவு பதப்படுத்தல் தொழில்களில் முதலீடு, வேளாண்மை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன
விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கு அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. கால்நடைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்க தேசிய அளவிலான இயக்கம் நடந்து வருகிறது. நாட்டின் விவசாயிகளுக்குத் தெளிவான தகவலை அளிக்கும் வகையில், தவறாக வழிநடத்துபவர்கள் விஷயத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளைப் பாதுகாப்பதாக சாமர்த்தியம் பேசும் அவர்கள் உண்மையில், பல கட்டுப்பாடுகளில் சிக்கிக் கிடக்கவே விரும்புகிறார்கள். இடைத்தரகர்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள், விவசாயிகளின் வருமானத்தை கொள்ளையடிப்பவர்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள். இதுதான் நாட்டின் இப்போதைய தேவையாக உள்ளது. இந்த காலத்திற்கான தேவையாக உள்ளது.
***
Development projects being inaugurated that will benefit the people of Bihar. #BiharKaPragatiPath https://t.co/EASdYznLKK
— Narendra Modi (@narendramodi) September 18, 2020
Development projects being inaugurated that will benefit the people of Bihar. #BiharKaPragatiPath https://t.co/EASdYznLKK
— Narendra Modi (@narendramodi) September 18, 2020
आज बिहार में रेल कनेक्टिविटी के क्षेत्र में नया इतिहास रचा गया है,
— PMO India (@PMOIndia) September 18, 2020
कोसी महासेतु और किउल ब्रिज के साथ ही बिहार में रेल यातायात,
रेलवे के बिजलीकरण,
रेलवे में मेक इन इंडिया को बढ़ावा देने,
नए रोज़गार पैदा करने वाले
एक दर्जन प्रोजेक्ट्स का आज लोकार्पण और शुभारंभ हुआ है: PM
4 वर्ष पहले, उत्तर और दक्षिण बिहार को जोड़ने वाले दो महासेतु, एक पटना में और दूसरा मुंगेर में शुरु किए गए थे।
— PMO India (@PMOIndia) September 18, 2020
इन दोनों रेल पुलों के चालू हो जाने से उत्तर बिहार और दक्षिण बिहार के बीच, लोगों का आना-जाना और आसान हुआ है: PM#BiharKaPragatiPath
आज भारतीय रेल,पहले से कहीं अधिक स्वच्छ है।
— PMO India (@PMOIndia) September 18, 2020
आज ब्रॉडगेज रेल नेटवर्क को मानवरहित फाटकों से मुक्त कर,पहले से कहीं अधिक सुरक्षित बनाया जा चुका है।
आज भारतीय रेल की रफ्तार तेज़ हुई है।
आज आत्मनिर्भरता औऱ आधुनिकता की प्रतीक, वंदे भारत जैसी रेल नेटवर्क का हिस्सा होती जा रही हैं: PM
आज बिहार में 12 हज़ार हॉर्सपावर के सबसे शक्तिशाली विद्युत इंजन बन रहे हैं।
— PMO India (@PMOIndia) September 18, 2020
बिहार के लिए एक और बड़ी बात ये है कि आज बिहार में रेल नेटवर्क के लगभग 90% हिस्से का बिजलीकरण पूरा हो चुका है।
बीते 6 साल में ही बिहार में 3 हज़ार किलोमीटर से अधिक के रेलमार्ग का बिजलीकरण हुआ है: PM
आज बिहार में किस तेज गति से रेल नेटवर्क पर काम चल रहा है, इसके लिए मैं एक तथ्य देना चाहता हूं।
— PMO India (@PMOIndia) September 18, 2020
2014 के पहले के 5 सालों में बिहार में सिर्फ सवा तीन सौ किलोमीटर नई रेल लाइन शुरु थी।
जबकि 2014 के बाद के 5 सालों में बिहार में लगभग 700 किलोमीटर रेल लाइन कमीशन हो चुकी हैं: PM
आज बिहार में 15 से ज्यादा मेडिकल कॉलेज हैं।
— PMO India (@PMOIndia) September 18, 2020
कुछ दिन पहले बिहार में एक नए AIIMS की भी स्वीकृति दे दी गई।
ये नया AIIMS, दरभंगा में बनाया जाएगा।
इस नए एम्स में 750 बेड का नया अस्पताल तो बनेगा ही, MBBS की 100 और नर्सिंग की 60 सीटें भी होंगी।
हज़ारों नए रोज़गार भी सृजित होंगे: PM
कल विश्वकर्मा जयंती के दिन, लोकसभा में ऐतिहासिक कृषि सुधार विधेयक पारित किए गए हैं।
— PMO India (@PMOIndia) September 18, 2020
इन विधेयकों ने हमारे अन्नदाता किसानों को अनेक बंधनों से मुक्ति दिलाई है, उन्हें आजाद किया है।
इन सुधारों से किसानों को अपनी उपज बेचने में और ज्यादा विकल्प मिलेंगे, और ज्यादा अवसर मिलेंगे: PM
किसान और ग्राहक के बीच जो बिचौलिए होते हैं,
— PMO India (@PMOIndia) September 18, 2020
जो किसानों की कमाई का बड़ा हिस्सा खुद ले लेते हैं,
उनसे बचाने के लिए ये विधेयक लाए जाने बहुत आवश्यक थे।
ये विधेयक किसानों के लिए रक्षा कवच बनकर आए हैं: PM
लेकिन कुछ लोग जो दशकों तक सत्ता में रहे हैं,
— PMO India (@PMOIndia) September 18, 2020
देश पर राज किया है,
वो लोग किसानों को इस विषय पर भ्रमित करने की कोशिश कर रहे हैं,
किसानों से झूठ बोल रहे हैं: PM
चुनाव के समय किसानों को लुभाने के लिए ये बड़ी-बड़ी बातें करते थे,
— PMO India (@PMOIndia) September 18, 2020
लिखित में करते थे, अपने घोषणापत्र में डालते थे और चुनाव के बाद भूल जाते थे।
और आज जब वही चीजें एनडीए सरकार कर रही है, किसानों को समर्पित हमारी सरकार कर रही है, तो ये भांति-भांति के भ्रम फैला रहे हैं: PM
जिस APMC एक्ट को लेकर अब ये लोग राजनीति कर रहे हैं, एग्रीकल्चर मार्केट के प्रावधानों में बदलाव का विरोध कर रहे हैं, उसी बदलाव की बात इन लोगों ने अपने घोषणापत्र में भी लिखी थी।
— PMO India (@PMOIndia) September 18, 2020
लेकिन अब जब एनडीए सरकार ने ये बदलाव कर दिया है, तो ये लोग इसका विरोध करने पर उतर आए हैं: PM
लेकिन ये लोग, ये भूल रहे हैं कि देश का किसान कितना जागृत है।
— PMO India (@PMOIndia) September 18, 2020
वो ये देख रहा है कि कुछ लोगों को किसानों को मिल रहे नए अवसर पसंद नहीं आ रहे।
देश का किसान ये देख रहा है कि वो कौन से लोग हैं, जो बिचौलियों के साथ खड़े हैं: PM
अब ये दुष्प्रचार किया जा रहा है कि सरकार के द्वारा किसानों को MSP का लाभ नहीं दिया जाएगा।
— PMO India (@PMOIndia) September 18, 2020
ये भी मनगढ़ंत बातें कही जा रही हैं कि किसानों से धान-गेहूं इत्यादि की खरीद सरकार द्वारा नहीं की जाएगी।
ये सरासर झूठ है, गलत है, किसानों को धोखा है: PM
हमारी सरकार किसानों को MSP के माध्यम से उचित मूल्य दिलाने के लिए प्रतिबद्ध है।
— PMO India (@PMOIndia) September 18, 2020
सरकारी खरीद भी पहले की तरह जारी रहेगी: PM
कोई भी व्यक्ति अपना उत्पाद, दुनिया में कहीं भी बेच सकता है, जहां चाहे वहां बेच सकता है।
— PMO India (@PMOIndia) September 18, 2020
लेकिन केवल मेरे किसान भाई-बहनों को इस अधिकार से वंचित रखा गया था।
अब नए प्रावधान लागू होने के कारण, किसान अपनी फसल को देश के किसी भी बाजार में, अपनी मनचाही कीमत पर बेच सकेगा: PM
मैं आज देश के किसानों को स्पष्ट संदेश देना चाहता हूं। आप किसी भी तरह के भ्रम में मत पड़िए।
— PMO India (@PMOIndia) September 18, 2020
इन लोगों से देश के किसानों को सतर्क रहना है।
ऐसे लोगों से सावधान रहें जिन्होंने दशकों तक देश पर राज किया और जो आज किसानों से झूठ बोल रहे हैं: PM
वो लोग किसानों की रक्षा का ढिंढोरा पीट रहे हैं लेकिन दरअसल वे किसानों को अनेक बंधनों में जकड़कर रखना चाहते हैं।
— PMO India (@PMOIndia) September 18, 2020
वो लोग बिचौलियों का साथ दे रहे हैं, वो लोग किसानों की कमाई को बीच में लूटने वालों का साथ दे रहे हैं: PM
किसानों को अपनी उपज देश में कहीं पर भी, किसी को भी बेचने की आजादी देना, बहुत ऐतिहासिक कदम है।
— PMO India (@PMOIndia) September 18, 2020
21वीं सदी में भारत का किसान, बंधनों में नहीं, खुलकर खेती करेगा,
जहां मन आएगा अपनी उपज बेचेगा,
किसी बिचौलिए का मोहताज नहीं रहेगा और
अपनी उपज, अपनी आय भी बढ़ाएगा: PM
उत्तर बिहार के क्षेत्र, जो दशकों से विकास से वंचित थे, वहां विकास को नई गति मिली है।
— Narendra Modi (@narendramodi) September 18, 2020
आज मिथिला और कोसी क्षेत्र को जोड़ने वाले महासेतु और सुपौल-आसनपुर कुपहा रेल रूट को बिहारवासियों की सेवा में समर्पित किया गया है। #BiharKaPragatiPath pic.twitter.com/n3oIiyemdv
रेलवे के आधुनिकीकरण के व्यापक प्रयास का बहुत बड़ा लाभ बिहार को, पूर्वी भारत को मिल रहा है।
— Narendra Modi (@narendramodi) September 18, 2020
बीते 6 साल में 3 हजार किलोमीटर से अधिक रेलमार्ग के बिजलीकरण के साथ बिहार में लगभग 90 प्रतिशत रेल नेटवर्क का बिजलीकरण पूरा हो चुका है। आज इसमें 5 और प्रोजेक्ट जुड़ गए हैं। pic.twitter.com/WH1bHJWFb4
आज हाजीपुर-घोसवर-वैशाली नई रेल लाइन के शुरू होने से वैशाली नगर, दिल्ली और पटना से भी सीधी रेल सेवा से जुड़ जाएगा।
— Narendra Modi (@narendramodi) September 18, 2020
इससे वैशाली में पर्यटन को बहुत बल मिलेगा और युवा साथियों को नए रोजगार उपलब्ध होंगे।
इसी तरह इस्लामपुर-नटेसर नई रेल लाइन से भी लोगों को बहुत फायदा होगा। pic.twitter.com/G1Ld4XABUJ
देशभर के किसानों को कृषि सुधार विधेयकों के पारित होने पर बधाई देता हूं।
— Narendra Modi (@narendramodi) September 18, 2020
नए प्रावधानों के लागू होने से किसान अपनी फसल को देश के किसी भी बाजार में मनचाही कीमत पर बेच सकेंगे।
किसान और ग्राहक के बीच जो बिचौलिए होते हैं, उनसे किसानों को बचाने के लिए ये विधेयक रक्षा कवच बनकर आए हैं। pic.twitter.com/nnF4afkPaY
मैं देश के किसानों को स्पष्ट संदेश देना चाहता हूं। आप किसी भी भ्रम में मत पड़िए।
— Narendra Modi (@narendramodi) September 18, 2020
जो लोग किसानों की रक्षा का ढिंढोरा पीट रहे हैं, दरअसल वे किसानों को अनेक बंधनों में जकड़कर रखना चाहते हैं।
वे बिचौलियों का साथ दे रहे हैं, वे किसानों की कमाई लूटने वालों का साथ दे रहे हैं। pic.twitter.com/dZlnxV591F