Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொழும்பில் உள்ள ஐ.பி.கே.எப் நினைவிடத்தை பிரதமர் பார்வையிட்டார்


கொழும்பில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை (.பி.கே.எப்) நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சென்று  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இலங்கையின் அமைதி, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த இந்திய அமைதி காக்கும் படையின் துணிச்சலான வீரர்களை அவர் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;

கொழும்பில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத் தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். இலங்கையின் பிராந்திய  ஒருமைப்பாடு, ஒற்றுமைசமாதானம் ஆகியவற்றுக்கான உயர்பணியில் தங்கள்  வாழ்வைத் தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையின் துணிச்சல் மிக்க வீரர்களை இத்தருணத்தில் நாம் நினைவுகூர்கிறோம்அவர்களின் அசைக்க முடியாத தைரியமும், அர்ப்பணிப்பும் நம் அனைவரது  உத்வேகத்தின் ஆதாரமாக நிலைத்திருக்கின்றன.

***

(Release ID: 2119327)

PKV/ RJ