பிரதமர் திரு. நரேந்திர மோடி, கொரிய குடியரசின் அதிபர் மேன்மைமிகு மூன் ஜே – இன் உடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.
கொரிய குடியரசுக்கு தான் சென்ற வருடம் மேற்கொண்ட பயணத்தை அன்புடன் நினைவுகூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்துவரும் நட்புறவை குறித்து தனது திருப்தியைத் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்று குறித்தும், அது உலக சுகாதார கட்டமைப்புக்கும் பொருளாதார நிலைமைக்கும் ஏற்படுத்தியுள்ள சவால்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். பெரும் தொற்றை கட்டுப்படுத்த தங்களது நாடுகளில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த சிக்கலை எதிர்கொள்வதற்கு தொழில்நுட்பம் சார்ந்த பதில் நடவடிக்கையை எடுத்ததற்தாக கொரிய குடியரசுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் பெரும் மக்கள்தொகையை ஒற்றுமை உணர்வோடு இந்த பெரும் தொற்றை எதிர்த்து போராடுவதற்காக ஊக்கப்படுத்தியதற்காக இந்திய அதிகாரிகளை அதிபர் மூன் ஜே-இன் பாராட்டினார்.
இந்தியாவிலுள்ள கொரிய மக்களுக்கு இந்திய அதிகாரிகள் அளித்து வரும் ஆதரவுக்காக பிரதமருக்கு அதிபர் நன்றி தெரிவித்தார்.
இந்திய நிறுவனங்களால் வாங்கப்பட்டு வரும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் விநியோகங்களை ஆதரிப்பதற்காக கொரிய குடியரசுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
தங்கள் நாடுகளின் வல்லுநர்கள், கோவிட்-19க்கான தீர்வுகளை ஆய்வு செய்யும் போது, ஒருவருக்கு ஒருவர் தொடர்ந்து தொடர்புகொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள் என இரு தலைவர்களும் ஒத்துக்கொண்டனர்.
கொரிய குடியரசு தேசிய சபைக்கு நடக்கவிருக்கும் தேர்தலுக்காக அதிபர் மூனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
*****
Had a telephone conversation with President @moonriver365 on the prevailing COVID-19 situation and how we can fight this pandemic through cooperation and leveraging the power of technology. https://t.co/e51GAApSaP
— Narendra Modi (@narendramodi) April 9, 2020