கொரிய குடியரசின் அதிபர் திரு. மூன் ஜே-இன்னின் சிறப்பு தூதர் திரு. டாங்சியா சங் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
கொரிய குடியரசின் அதிபர் தமது சிறப்பு தூதரை அனுப்பி வைத்ததற்காக பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
2015ம் ஆண்டு மே மாதம் தாம் கொரியாவிற்கு சுற்றுப்பயணம் சென்று வந்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். அந்த பயணத்தின் மூலம் இருதரப்பு உறவு சிறப்பு ராஜிய பங்களிப்புடன் உயர்ந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார் . கொரிய குடியரசு இந்தியாவின் முக்கியமான வளர்ச்சி பங்குதாரர் என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார்.
கொரியாவுடன் இருதரப்பு உறவு வலுப்பெறுதல் என்பது வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்ததாக மட்டும் இருத்தல் கூடாது, இராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளிலும் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் தென்கொரிய குடியரசின் தலைவர் மூனுடன் ஒருங்கிணைந்து செயல்பட தாம் உறுதி பூண்டுள்ளதாக கூறிய பிரதமர், அந்நாட்டு அதிபரை வெகுவிரைவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
==========
Mr. Jeong Dong-chae, Special Envoy, South Korea met PM @narendramodi. pic.twitter.com/YhpPo94ftW
— PMO India (@PMOIndia) June 16, 2017