Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொரிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு

கொரிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (10.09.2023) புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது கொரிய குடியரசின் அதிபர் திரு யூன் சுக் இயோலை சந்தித்தார்.

 

இந்தியாவின் ஜி-20 தலைமைப் பதவிக்கு அதிபர் யூன் சுக் இயோல் வாழ்த்து தெரிவித்தார். சந்திராயன் திட்டத்தின் வெற்றிக்காகவும் பிரதமருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

 

இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவுகள் நிறுவப்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டு நிறைவடைவதை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உற்பத்தி, செமிகண்டக்டர்கள் மற்றும் மின்சார வாகன பேட்டரி தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் இருதரப்புக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர்கள் ஆய்வு செய்தனர்.

 

பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

 

***

ANU/SM/PLM/DL