Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொரியாவில் இந்திய சமுதாயத்தினரிடையே பிரதமர் உரை

கொரியாவில் இந்திய சமுதாயத்தினரிடையே பிரதமர் உரை

கொரியாவில் இந்திய சமுதாயத்தினரிடையே பிரதமர் உரை

கொரியாவில் இந்திய சமுதாயத்தினரிடையே பிரதமர் உரை


 

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொரியாவில் இந்திய சமுதாயத்தினரிடையே உரையாற்றினார்.

     சியோலில் தனக்கு தரப்பட்ட அன்பான வரவேற்புக்கு இந்திய சமுதாயத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

     இந்தியாவிற்கும் கொரியாவிற்கும் இடையேயான உறவுகள் வர்த்தகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றார் அவர். இருநாட்டு மக்களுக்கு இடையேயான இணக்கமே, இருநாட்டு  உறவுகளுக்கு அடிப்படையாக உள்ளது என்றார்.

     அயோத்தியிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்து, கொரிய மன்னரை திருமணம் செய்து கொண்ட சூரிய ரத்னா அரசியை நினைவு கூர்ந்த பிரதமர், இந்தியாவிற்கும், கொரியாவிற்கும் இடையேயான தொன்மையான  உறவுகளை குறிப்பிட்டுப் பேசினார்.  கொரியாவின் முதல் பெண்மணி கிம் ஜுங்க் சூக் அண்மையில் தீபாவளியின் போது அயோத்திக்கு வருகை தந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

     இருநாடுகளுக்கு இடையேயான நட்பு எனும் பந்தத்திற்கு புத்த மதம் மேலும் வலு சேர்த்ததாக பிரதமர் கூறினார். கொரியாவின் வளர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இந்திய சமுதாயம் வழங்கி வரும் பங்களிப்பு தமக்கு மகிழ்ச்சி தருவதாக அவர் கூறினார்.

     கொரியாவில் யோகா மற்றும் இந்திய திருவிழாக்கள் பெற்றிருக்கும் செல்வாக்கு பற்றி அவர் குறிப்பிட்டார்.  கொரியாவில் இந்திய உணவு வகைகளும், வேகமாக பிரபலமாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் பிரபல விளையாட்டான கபடியில் கொரியா சிறந்து விளங்கியதைப் பற்றி அவர் எடுத்துக் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள இந்திய சமுதாயத்தினரை இந்தியாவின் தூதர்கள் என்று விவரித்த பிரதமர், இவர்களது கடின உழைப்பும், ஒழுங்கும், உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தியிருப்பதாகக் கூறினார்.

இந்தியா, இவ்வருடம் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறது என்றும், பாபு பற்றி உலகம் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், இந்த நோக்கத்தை அடைவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டியது நமது பொறுப்பு என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.

கொரியாவுடனான இந்தியாவின் உறவுகள் வலுப்பெற்று வருவதாகத் தெரிவித்த பிரதமர், இந்த மண்டலத்தில் அமைதி, ஸ்திரத் தன்மை மற்றும் வளம் நிலவிட இருநாடுகளும் ஒன்றுபட்டு செயல்படுவதாகக் கூறினார். தற்போது இந்தியாவின் பிரபல பொருட்கள் கொரியாவில் கிடைப்பதாகவும், கொரியப் பொருட்கள் இந்திய இல்லங்களில் பிரபலமாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.

அண்மைக் காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வளர்ச்சி குறித்து பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்தியா விரைவில் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

எளிதாக வர்த்தகம் செய்வது, எளிதான வாழும் முறை, ஆகியவற்றில் சூழலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர்  கூறினார்.  சரக்கு, சேவை வரி மற்றும் பணமில்லா பொருளாதாரம் போன்ற சீர்திருத்தங்களை அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்தியாவில் நிகழும் உள்ளடக்கிய நிதிப் புரட்சியை உலகம் கண்டு வருவதாக அவர் கூறினார். வங்கிக் கணக்குகள் , காப்பீடு மற்றும் முத்ரா கடன்கள் பற்றி அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு சாதனைகளின் காரணமாக இந்தியாவின் கவுரவம் உயர்ந்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். ஏழைகளுக்கான இலவச மருத்துவ சிகிச்சை, உலகின் மிக உயரமான – ஒற்றுமை சிலை மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றி அவர் குறிப்பிட்டார்.

தூய்மையான எரிசக்தித்துறையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியின் அமைப்பு பற்றி பிரதமர் விவரித்தார்.

இந்தியாவில் தற்போது புதிய ஆற்றல் ஊற்றெடுத்திருப்பதாக பிரதமர் கூறினார். சியோல் அமைதிப் பரிசினை நாளை தாம் இந்திய மக்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் சார்பில் பெற்றுக் கொள்ளவிருப்பதாகக் கூறினார்.

பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா பற்றி குறிப்பிட்ட பிரதமர், இம்முறை கும்பமேளாவில் பராமரிக்கப்படும் தூய்மையை உலகம் கருத்தில் கொண்டுள்ளது என்றார். தனிநபர் முயற்சிகளின் மூலமாக கொரியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினர், இந்தியாவில் சுற்றுலாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.