Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொமாரோஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசாலி அசௌமானிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


கொமாரோஸ் நாட்டின் அதிபராக இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு ஆசாலி அசௌமானிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா- கொமாரோஸ் கூட்டாண்மை, இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டாண்மை மற்றும் விஷன் சாகர்ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

கொமாரோஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆசாலி அசௌமானிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா- கொமாரோஸ் கூட்டாண்மை, இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டாண்மை மற்றும் விஷன் சாகர்ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தத் தொடர்ந்து இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறேன்.

***

(Release ID: 2000467)

ANU/SMB/ /RS/RR