Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தனின் 100வது பிறந்தநாளையொட்டி பிரதமர் வாழ்த்து


கேரள முன்னாள் முதலமைச்சர்  திரு. வி.எஸ்.அச்சுதானந்தனின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக கேரள மக்களுக்கு சேவை செய்ததற்காக அச்சுதானந்தனைப் பாராட்டியுள்ள பிரதமர் , அவர் நீண்ட , ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தனின்  100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள். பல தசாப்தங்களாக கேரள மக்களுக்காக உழைத்து வருகிறார். குறிப்பாக நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களாக பணியாற்றியபோது அவருடன் நான் நடத்திய உரையாடல்களை நினைவு கூர்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழட்டும்’’.

***

ANU/AD/PKV/DL