Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேதார்நாத்திற்கு பிரதமர் விஜயம், கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

கேதார்நாத்திற்கு பிரதமர் விஜயம், கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

கேதார்நாத்திற்கு பிரதமர் விஜயம், கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

கேதார்நாத்திற்கு பிரதமர் விஜயம், கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் பயணம் மேற்கொண்டார். கேதார்நாத் கோவிலில் அவர் வழிபட்டார். ஐந்து கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மந்தாகிரி ஆற்றில் தடுப்புச் சுவர் மற்றும் மலைக்கணவாய் அமைப்பது; சரஸ்வதி ஆற்றில் மலைக்கணவாய் மற்றும் தடுப்புச் சுவர் அமைப்பது; கேதார்நாத் கோயிலுக்கு பிரதான அணுகுபாதை அமைத்தல்; சங்கராச்சாரியா குடில் மற்றும் சங்கராச்சாரியா அருங்காட்சியகம் அமைத்தல்; மற்றும் கேதார்நாத் புரோஹித்களுக்கு வீடுகள் உருவாக்குதல் ஆகிய திட்டங்கள் இதில் அடங்கும். கேதார்புரி மறுகட்டுமானத் திட்டம் பற்றி பிரதமரிடம் விளக்கப்பட்டது.

பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், தீபாவளிக்கு அடுத்த நாளில் கேதார்நாத் வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். குஜராத்தில் புத்தாண்டு தொடக்க கொண்டாட்டம் இன்று தொடங்குவதாக அவர் தெரிவித்தார். உலகெங்கும் உள்ள குஜராத்தியர் அனைவருக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மக்களுக்கு ஆற்றும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவை என்று குறிப்பிட்ட பிரதமர், 2022ல் சுதந்திரத்தின் 75வது ஆண்டு வருவதற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது என்ற கனவை நனவாக்குவதில் முழு உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார். 2013 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பேரழிவை நினைவுபடுத்திய பிரதமர், குஜராத்தின் முதல்வர் என்ற முறையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தாம் முன்வந்ததாகத் தெரிவித்தார். மறுகட்டுமான முயற்சியில் குஜராத் மாநில அரசின் மூலம் ஆதரவு அளித்தது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

கேதார்நாத்தில் நடைபெறும் பணிகளைப் பார்த்தால், “புனிதத் தலம்” என்பது எப்படி – யாத்ரிகர்களுக்கான வசதிகள் மற்றும் குருமார்கள் நலன் என இரண்டு அம்சங்களிலும் – முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் பிரதமர் கூறினார். கேதார்நாத்தில் உருவாக்கப்படும் கட்டமைப்பு வசதிகள் நல்ல தரமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அது நவீனமாக இருப்பதுடன், பாரம்பரியமான நடைமுறைகளைப் பாதுகாத்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

ஆன்மிகம், சாகசம் மற்றும் சுற்றுலா அம்சங்களில், இயற்கை நேசிப்பவர்களுக்கு ஏராளமான விஷயங்களை அளிக்கும் தன்மைகள் கொண்டதாக இமயமலைப் பகுதி உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார். இமயமலைப் பகுதியில் உள்ள விஷயங்களைக் கண்டு உணர்ந்து கொள்வதற்கு ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

உத்தராகண்ட் மாநில ஆளுநர் டாக்டர் கே.கே. பால், உத்தராகண்ட் முதல்வர் திரு. திரிவேந்திர சிங் ரவாத் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

****