Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


கென்பெட்வா நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு நிதி அளித்தல் மற்றும் அமலாக்கத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய  அமைச்சரவை ஒப்புதல் இன்று ஒப்புதல் அளித்தது.

2020-21 விலை நிலவரப்படி, கென்-பெட்வா இணைப்புத் திட்டத்தின் மொத்த செலவு ரூ.44,605 கோடி  என மதிப்பிடப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.39,317 கோடி நிதியுதவி செய்யவும், இதில் ரூ.36,290 கோடி மானியமாகவும், ரூ.3,027 கோடி கடனாகவும் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் இந்தத் திட்டத்தை 8 ஆண்டுகளில் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.  இது செயல்பாட்டுக்கு வரும்போது ஆண்டுக்கு 10.62 லட்சம் ஹெக்டேர் பாசன வசதிப் பெறும்.   62 லட்சம் பேருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்.  103 மெகாவாட் புனல் உற்பத்தியும், 27 மெகாவாட் சூரிய மின்சக்தியும் உற்பத்தி செய்யப்படும்.

************