Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கூட்டு ஆராய்ச்சி தொடர்பாக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (IIST) மற்றும் நெதர்லாந்தின் டெல்ப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றின் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


கூட்டு ஆராய்ச்சி தொடர்பாக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (IIST) மற்றும் நெதர்லாந்தின் டெல்ப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்  ஆகியவை செய்து கொண்ட  புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்தது. இதில் பல முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கல்வித் திட்டங்களை மேற்கொள்ளவும், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளவும், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்(IIST)  மற்றும் நெதர்லாந்தின்தி டெல்ப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 9 மற்றும் மே 17 ஆம் தேதிகளில் அந்தந்த மையங்களில் கையெழுத்திடப்பட்டு மின்னஞ்சல் மூலம் பரிமாறப்பட்டது

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விபரங்கள்:

மாணவர்களை பரிமாறிக் கொள்ளும் திட்டம்: இரு தரப்பினரும், இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வு படிப்பு மாணவர்களை பரிமாறிக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழான  ஆய்வுகளை , இருதரப்பினரும் பரஸ்பரம் ஆலோசித்து முடிவு செய்துக் கொள்ளலாம்.

இரட்டை பட்டம்: இரு தரப்பினரும் சிறப்பு பாடத்திட்டத்தை உருவாக்கி, மாணவர்களுக்கு சொந்த கல்வி நிறுவனத்தின் முதல் பட்டத்துடன், கூடுதலாக இரண்டாவது பட்டத்தை வழங்கி கொள்ளலாம்.

பேராசிரியர்கள் பரிமாற்றம்: கூட்டாக உருவாக்கப்படும் பாடத்திட்டங்களை நடத்த, இரு நிறுவனங்களும் பேராசிரியர்களை பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம்.

கூட்டு ஆராய்ச்சி: ஆராய்ச்சி திட்டங்களை இரு நிறுவனங்களின் பேராசிரியர்களும் அடையாளம் கண்டு கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.

பயன்கள்:

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் வெளியீடுகள் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். ஆய்வு கூட்டங்கள், பி.எச்.டி படிப்புகள், இரட்டை பட்டப்படிப்பு போன்றவற்றை கூட்டாக மேற்கொள்ள முடியும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கும் இந்த ஒப்பந்தம் ஊக்கம் அளிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742286

 

—-