குவைத்தில் உள்ள துடிப்பான இந்திய புலம்பெயர் மக்கள் அளித்த இதயபூர்வமான வரவேற்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர்களின் ஆற்றல், அன்பு மற்றும் இந்தியாவுடனான அசைக்க முடியாத தொடர்பு ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
குவைத்தில் இன்று பிற்பகலில் பிரதமர் திரு நரேந்திர மோடிதிரு மங்கள் சைன் ஹந்தா ஜியை சந்தித்ததில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
“குவைத்தில் உள்ள துடிப்பான இந்திய புலம்பெயர் மக்களிடம் இருந்து இதயபூர்வமான வரவேற்பு கிடைத்தது.
இந்தியாவுடனான அவர்களின் ஆற்றல், அன்பு மற்றும் அசைக்க முடியாத தொடர்பு ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. அவர்களின் உற்சாகத்திற்கும், நமது நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் நன்றி .
“இன்று மதியம் குவைத்தில் திரு மங்கல் சைன் ஹந்தா ஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியாவுக்கான அவரது பங்களிப்பையும், இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது ஆர்வத்தையும் நான் பாராட்டுகிறேன்’’.
*****
PKV/KV