Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குவால்காம் தலைமை செயல் அதிகாரி உடன் பிரதமர் சந்திப்பு

குவால்காம் தலைமை செயல் அதிகாரி உடன் பிரதமர் சந்திப்பு


குவால்காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு கிறிஸ்டியானோ அமோனை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். 

இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் மின்னணு துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து சந்திப்பின் போது இருவரும் விவாதித்தனர். மின்னணு அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கு சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் இந்திய செமி கண்டக்டர் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் விவாதித்தனர்.

உள்ளூர் புதுமைகள் சூழலியலை இந்தியாவில் கட்டமைப்பதற்கான உத்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

*****************