Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குவஹாத்தியில் 12-வது தெற்காசிய விளையாட்டுகளை துவக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

குவஹாத்தியில் 12-வது தெற்காசிய விளையாட்டுகளை துவக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

குவஹாத்தியில் 12-வது தெற்காசிய விளையாட்டுகளை துவக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

குவஹாத்தியில் 12-வது தெற்காசிய விளையாட்டுகளை துவக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை


அண்டைப்பகுதிகளில் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள், சார்க் நாடுகளின் சகோரதர சகோதரிகளிடையே உரையாற்றுவதில் பெருமையும் பெருமிதமும் கொள்கிறேன். உங்கள் அனைவரையும் இந்தியாவிற்கு, விருந்தினர்களை தேவர்களுக்கு சமமாக பாவிக்கும் பண்பாடுடைய இந்தியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விருந்தோம்பலுக்கும் விளையாட்டு நாட்டத்திற்கும் பெயர்போன அழகிய குவஹாத்தி நகரத்திற்கு வரவேற்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்.

வலிமையான பிரம்மபுத்திரா நதிக்கரையில் இந்த முக்கியமான சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு மிகுந்த ஆர்வத்துடனும் துடிப்புடனும் நீங்கள் வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளிக்கிறது.

பழங்கால இந்தியாவின் பிரக்ஜோதிஸ்பூர் காலத்தில் இருந்து குவஹாத்தி நகரம் நெடுந்தூரம் பயணப்பட்டுள்ள வந்துள்ளது. அது தற்போது நவீன துடிப்புள்ள நகரம் மட்டுமின்றி இந்தியாவின் வடகிழக்கு மண்டத்தின் பொருளாதார செயல்பாட்டு மையமாகவும் திகழ்கிறது.

வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குறிப்பாக அசாமைச் சேர்ந்த இளைஞர்கள் நல்ல கால்பந்து போட்டி ஒன்றை காணும் சந்தர்பத்தை நழுவவிடமாட்டார்கள். இது சார்ந்த புகழும் பெருமையும் உலகளாவி பரவி உள்ளதால் தான் 17 வயதுக்கு உட்பட்டோர் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் 2017ம் ஆண்டில் முதல்முறையாக இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட போது இப்போட்டிகளின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் பிரதான இடமாக குவஹாத்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இன்று துவங்கும் விளையாட்டு போட்டிகள் என்னைப் பொறுத்தவரை 3 டி-களை உள்ளடக்கியது. டேலண்ட், டீம் ஒர்க், டுகெதர்னெஸ் எனப்படும் திறமை, குழுவாக செயல்படும் தன்மை, ஒன்றிணைந்து இருத்தல் என்பவையாகும் அவை. தற்போது நம்மிடையே தெற்காசிய முழுமையிலும் இருந்து மிகச் சிறந்த மிக இளைய திறமைசாலிகள் குழுமி உள்ளனர். நீங்கள் உங்கள் குழுக்களின் பெருமைமிகு உறுப்பினர்கள் – அது உங்கள் விளையாட்டுகளின் குழுவாகவோ அல்லது நீங்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் நாட்டின் பெரிய குழுவாகவோ இருக்கலாம். அதேசமயம் இந்த விளையாட்டு போடிடடிகள் தெற்காசிய நாடுகள் அனைத்திற்குமான ஒன்றுபடுதல் உணர்வை கொண்டாடுகிறது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை போன்ற எந்த நாட்டில் இருந்து நாம் வந்திருந்தாலும் நமது வீடு தெற்காசியா என்றே சொல்லுகிறோம்.

தனிநபர் வாழ்க்கையில் விளையாட்டுகள் முக்கிய இடம் வகிக்க வேண்டும். விளையாட்டுகள் இல்லாமல் ஆளுமையின் மொத்த மேம்பாடு என்பது முழுமைப்பெறாது. மிக முக்கியமாக விளையாட்டுகள் மிக முக்கியமான விளையாட்டு வீரர் உணர்வை நம்மிடையே கொண்டுள்ளது. விளையாட்டுகள் இல்லாமல் விளையாட்டு உணர்வும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். விளையாட்டு உணர்வு தடகளங்களில் மட்டுமின்றி உங்கள் வாழ்க்கையின் இதர அம்சங்களிலும் உதவிகரமாக இருக்கும். உங்கள் விளையாட்டுகளில் நீங்கள் கற்றவற்றை உங்கள் முழு வாழ்க்கையிலும் வைத்துப் போற்றுவீர்கள். நான் எப்போதும் சொல்லுவேன் எவர் ஒருவர் விளையாடுகிறாரோ அவர் ஒளிர்கிறார் என்று.

இந்த விளையாட்டு போட்டிகளின் இலட்சினை சின்னமான ‘டிக்கோர்’ என்பது மிக புத்தி கூர்மையுள்ள குட்டி காண்டாமிருகத்தை குறிக்கிறது. அது விளையாட்டு வீரர்களின் உணர்வையும் இளம் வயது விளையாட்டு விரும்பிகள் உணர்வையும் பிரதிபளிக்கிறது.

இந்த விளையாட்டு போட்டிகளின் கீதமான “Ei prithivi ekhan krirangan, krira hol shantir prangan” என்ற பாடலை காலம் சென்ற மிகப்பிரபலமான டாக்டர் புபேன் ஹசாரிக்கா பாடியுள்ளார்.

தனது மிகவும் கவர்ச்சியான குரல் மூலம் மக்களை மயக்கியவர் இந்த பாடகர் : அவரது இந்த பாடல் தெற்காசிய விளையாட்டுகளின் உணர்வை, அமைதி, நட்புறவு, வளம் ஆகியவற்றின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இந்த விளையாட்டு போட்டிகளின் அமைப்பு குழுவினர் எட்டு சார்க் நாடுகளில் இருந்து புனித நீர் கொண்டு வந்திருப்பதாகவும் சார்க் நாடுகளிடையேயான பகிர்ந்து கொள்ளப்பட்ட உள்ளக்கிடக்கைகளையும் கூட்டுறவு உணர்வையும் குறிக்கும் வகையில் இந்த புனித நீர் ஒன்று கலக்கப்படும் என்றும் திரு. சர்பானந்தா சோனோவால் என்னிடம் தெரிவித்துள்ளார்.

டாக்டர் புபேன் ஹசாரிக்காவின் ‘நாம் எல்லோரும் ஒரே படகில் உள்ளோம் சகோதரா’ என்ற பாடல் இன்னும் சில நிமிடங்களில் ஒலிக்க உள்ளது. இந்த பாடல் முழுமையும் சார்க் நாடுகள் பற்றியதுதான். நாம் அனைவரும் ஒரு குடும்பமாக கைகோர்க்க வேண்டும். தெற்காசிய விளையாட்டுகள் வழியாக இந்த நேச உணர்வை நாம் தூண்டிவிட வேண்டும்.

இந்தியாவிற்கான எனது நெடுநோக்குதான் தெற்காசியாவிற்கான நெடுநோக்கு ஆகும். அதாவது “அனைவரும் ஒன்றுசேருவோம், அனைவரும் முன்னேறுவோம்” முன்னேற்றத்தை நோக்கிய நமது பயணத்தில் அனைத்து தெற்காசிய நாடுகளும் கூட்டாளிகள்.

சார்க் நாடுகளில் வாழும் மக்களாகிய நாம் உலக மக்கள் தொகையில் 21 சதவீத பங்கு வகிக்கிறோம். உலகப் பொருளாதாரத்திற்கு 9 சதவீத பங்களிக்கிறோம்.

விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்கும் 23 வகையான போட்டிகள் தொடர்பான 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் தொடங்குவதற்காக நாம் எல்லாம் குழுமி உள்ள நிலையில் இந்தியாவின் வடகிழக்குக்கு, இந்த மாபெரும் நகரத்திற்கு நட்புறவு, நம்பிக்கை, புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து நாடுகளின் விளையாட்டு வீரர்களை கொண்டு வந்துள்ளோம்.

இந்த விளையாட்டுகள் தொடங்கி நடந்துவரும் போது இந்த நட்புறவு, நம்பிக்கை, புரிந்துணர்வு ஆகியன விளையாட்டு வாய்ப்புகளாக மாறுவதோடு மட்டுமின்றி வர்த்தக மற்றும் சுற்றுலா வாய்ப்புகளாகவும் மாறும்.

இந்த மண்டலத்திற்கு வர்த்தக, கருத்து பரிமாற்றம், விளையாட்டுகள் ஆகியவற்றின் மூலம் வளத்தையும் அமைதியையும் கொண்டுவர இந்த விளையாட்டு போட்டிகள் உந்துவிசையாக அமையும். இந்த விளையாட்டுகள் சார்க் நாடுகளின் மக்கள் தங்கள் திறமையை உணர ஒரு வாய்ப்பாக அமையட்டும்.

விளையாட்டு உணர்வு என்பது தாக்குபிடிக்கும் திறன், மன உறுதி, மனச்சமநிலை ஆகிய தகுதிகளை சமமாக ஒருங்கிணைக்கும் வாழ்க்கைத் தத்துவம் செயல்திறனின் சவால்கள், முயற்சிகளின் மகிழ்ச்சி, வெற்றியின் களிப்பு, நட்புணர்வு, நியாயமான பங்கேற்பு போன்ற விளையாட்டு களத்தின் தன்மைகள் பண்பாடு, கல்வி, நன்நெறி, கண்ணியம், சமூகம் ஆகியன எவ்வாறு ஒன்றோடு ஒன்றிணைந்து செயல்படுகிறது என்பது குறித்து நமக்கு விரிவாக விளக்குகிறது.

விளையாட்டு களத்தில் நம்மை பிரிக்கும் அம்சங்களை மறந்து ஒருவருடன் ஒருவர் விளையாட்டு உணர்வுடனும் தீரச் செயல் ஆர்வத்துடனும் உண்மையான இணைப்பை ஏற்படுத்த இயலும்.

நாம் நமது பல தரப்பு தன்மையை கொண்டாடும் அதே சமயம் விளையாட்டுகளின் பொது விதிகளின் கீழ் ஒன்றுபடுகிறோம், நேர்மை, நியாயமான ஆடும்முறை ஆகிய பகிர்ந்து கொண்ட நன்நெறிகள் நம்மை இணைக்கின்றன.

அமைதிக்காகவும் வளத்திற்காகவும் நாம் விளையாடுவோம். முழு ஆற்றலுடனும் ஆர்வத்துடனும் விளையாடுவோம் அப்போதுதான் போட்டிகள் முடிந்த நீண்ட நாட்களுக்கு பிறகும் அவற்றை நினைவில் கொள்ள இயலும்.

இந்த 12 நாட்களில் நீங்கள் உருவாக்கும் நட்புறவுகள், நீங்கள் எடுத்துச் செல்லும் உறவுகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
இந்த உறவுகளை நீங்கள் நினைவில் நிறுத்துவீர்கள் என்பதிலும் நமது நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் நட்புறவிற்கான தூதர்களாவீர்கள் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உண்டு.

பதக்கங்களுக்காக விளையாடி ஒருவருக்கொருவர் கடினமான போட்டியாளர்களாக விளையாட்டு வீரர்கள் விளையாடிவரும் நிலையில் தங்களது விளையாட்டு கால அட்டவணைக்கிடையே சுற்றுலா இடங்களுக்கும் வனவிலங்கு சரணாலயங்களுக்கும் சென்று மனம் மகிழுமாறு பார்வையாளர்களையும் விளையாட்டு வீரர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

சார்க் நாடுகளில் இருந்து வந்துள்ள நமது நண்பர்களை மீண்டும் ஒருமுறை வரவேற்கிறேன். குவஹாத்தியில் செலவிடும் இந்த இரண்டு வார காலத்தில் குருகுலத்தின் உணர்வு ஓங்கட்டும் என்றும் விளையாட்டு வீரர்கள் தங்களது சிறந்த திறனை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளட்டும் என்றும் குறிப்பிடத்தக்க இந்த அனுபவத்தையும் மன நிறைவையும் தங்களுடன் எடுத்துச் செல்லட்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

நடைபெறும் போட்டிகள் உண்மையான உணர்வுடன் நடக்கட்டும். தலை சிறந்தவர்கள் வெல்லட்டும்.

12-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்குவதாக நான் அறிவிக்கிறேன்.

நன்றி !.

***