குறைந்த மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை பீம் செயலி மூலம் மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுதில்லி, மார்ச் 19, 2025
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டில் தனிநபர் – வியாபாரிகள் (P2M) இடையே பீம் செயலி மூலம் மேற்கொள்ளும் குறைந்த மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஊக்கத்தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 01.04.2024 முதல் 31.03.2025 வரையிலான காலகட்டத்தில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
சிறு வணிகர்களுக்கு 2000ரூபாய் வரையிலான பீம் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
ஊக்கத்தொகையாக ஒவ்வொரு பண பரிவர்தனைகளுக்கும் தலா 0.15% ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112771
****
TS/SV/SG/KR
The incentive scheme on promoting low value UPI transactions, which has been approved by the Cabinet today will encourage digital payments and further 'Ease of Living.'https://t.co/TmVtSMsEoH
— Narendra Modi (@narendramodi) March 19, 2025