Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குரு தேக் பகதூர் உயிர்த் தியாகம் செய்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்


குரு தேக் பகதூர் உயிர்த் தியாகம் செய்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நீதி, சமத்துவம், மனிதகுலத்தின் பாதுகாப்பு ஆகிய மாண்புகளுக்காகவும் இணையற்ற தைரியம், தியாகத்துக்காகவும் அவரை நினைவு கூர்வதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

குரு தேக் பகதூரின் தியாக தினத்தில், நீதி, சமத்துவம், மனிதகுலத்தின் பாதுகாப்பு ஆகியவற்றின் மதிப்புகளுக்காகவும் அவரது இணையற்ற தைரியம் தியாகத்துக்காகவும் அவரை நினைவு கூர்வோம். அவரது போதனைகள் துன்பங்களை எதிர்கொண்டு உறுதியாக நிற்கவும், தன்னலமின்றி சேவை செய்யவும் நம்மை ஊக்குவிக்கின்றன. ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவை குறித்த அவரது செய்தியும் நம்மைப் பெரிதும் ஊக்குவிக்கிறது.”

***

 

PLM /DL