Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குருத்வாரா ரக்காப் கஞ்ஜிற்கு பிரதமர் நேரில் சென்று குரு தேக் பகதூருக்கு மரியாதை

குருத்வாரா ரக்காப் கஞ்ஜிற்கு பிரதமர் நேரில் சென்று குரு தேக் பகதூருக்கு மரியாதை


பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள ரக்காப் கஞ்ஜிற்கு இன்று நேரில் சென்று குரு தேக் பகதூரின் உயரிய தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு மரியாதை செலுத்தினார்.

குரு தேக் பகதூர் அவர்களின் புனித உடல் தகனம் செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாரா ரக்காப் கஞ்ஜ் சாஹிப்பில் இன்று காலை பிரார்த்தனை செய்தேன். மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். குரு தேக் பகதூர் அவர்களின் கருணையால்  உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களைப் போல நானும் மிகவும் தூண்டப்பட்டேன்.

குரு சாஹிப்களின் உயரிய கிருபையால் குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்தநாளை நமது அரசின் ஆட்சிக் காலத்தில் சிறப்பான நிகழ்வாகக் கொண்டாடுவோம்.

இந்தப் புனிதத் திருநாளை வரலாற்றுச் சிறப்பு மிக்க முறையில் குரு தேக் பகதூர் அவர்களின் கொள்கைகளைப் போற்றும் வகையில் கொண்டாடுவோம்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

——