தேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் உள்ள குருத்தணு ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிட்டார். பெங்களூரில் உள்ள இந்த நிறுவனத்தை பார்வையிட்ட பிரதமர் அங்குள்ள விஞ்ஞானிகளுடன் உரையாடினார். குருத்தணு ஆய்வகத்தில் உள்ள விஞ்ஞானிகள் அங்கு நடைபெற்று வரும் ஆராய்சிகள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைத்தனர்.
அதன் பிறகு அங்குள்ள இளம் விஞ்ஞானிகளுடன் பிரதமர் அரை மணி நேரம் கலந்துரையாடினார். இந்திய பாரம்பரிய மருத்துவத்திலான ஆராய்ச்சிகள், மரபணு வங்கி மூலம் வனவிலங்கு பாதுகாப்பு இந்தியாவில் உற்பத்திசெய்வோம் போன்ற பல துறைகள் குறித்து அவர்கள் உரையாடினர்.
பள்ளி மாணவர்களை சந்தித்து உரையாடுமாறு பிரதமர் விஞ்ஞானிகளை வலியுறுத்தினார். இதன் மூலம் பள்ளி குழந்தைகளை இந்த துறையில் ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மத்திய அமைச்சர்கள் சதானந்த கெளடா மற்றும் ஆனந்த் குமார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் உடன் இருந்தனர்.