கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி
பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத்து
பேராயர் குரியாகோஸ் பாரநிகுலங்கரா
பேராயர் அனில் கொடோ.
திரு. அருண் ஜெட்லி
டாக்டர். நஜ்மா ஹெப்துல்லா
மாநிலங்கள் அவையின் துணை தலைவர் திரு. பி.ஜெ.குரியன்,
மோநிசிஞ்ஞர் செபாஸ்டியன் வடக்கும்பாடன்
கேரளாவின் இரண்டு பெரும் புனிதர்கள் குரியாகோஸ் எலியாஸ் சாவரா, அன்னை எவ்ராசியவிற்கு புனிதத்துவம் அளித்ததற்கான தேசிய விழாவில் பங்குபெறுவதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தினால் மொத்த நாடும் பெருமை அடைகிறது. புனித அல்போன்சாவிற்கு பிறகு கேரளாவில் இருந்து இவர்கள் இருவருக்கும் புனிதத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
புனித சாவரா, புனித எவ்ராசியவின் வாழ்க்கையும் செயல்களும் கிருஸ்துவர்களுக்கு மட்டும் அல்ல மொத்த மனித இனத்திற்கும் தூண்டுதலாக அமைந்துள்ளது. மனிதகுலத்தின் நலனுக்காக தன்னலமற்ற சேவை செய்வது மூலம் கடவுளுக்கு தம்மை அர்ப்பணிப்பதில் அவர்கள் பெரும் உதாரணமாக திகழ்கின்றனர்.
புனித சாவுரா ஒரு பிரார்த்தனை மனிதன். மேலும் ஒரு சமூக சீர்திருத்தவாதி. கல்வி மிகவும் குறைந்த அளவே காணப்பட்ட ஒரு காலத்திலேயே அவர் ஒவ்வொரு தேவாலயத்திலும் ஒரு பள்ளி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் மூலம் சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களும் கல்வி பெறுவதற்கான கதவை திறந்துவைத்தார்.
அவர் ஒரு சமஸ்கிருத பள்ளியையும் அச்சகத்தையும் துவக்கியது கேரளாவிற்கு வெளியில் உள்ள ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பெண்கள் முன்னேற்றத்திற்கு அவர் அளித்த பங்கும் குறிப்பிடத்தக்கது.
புனித எவ்பிராசியா பிரார்த்தனை மற்றும் பக்திக்காகவே தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்த ஒரு ஆன்மீகவாதி.
இந்த இரண்டு புனிதர்களும் மனித சேவை மூலம் இறைவனுக்கு தனது வாழ்க்கையை அற்பனித்தவர்கள். பண்டைய இந்திய பழமொழி: உலக நலன் ஒன்றே மோட்சத்திற்கான வழி என்பதே இவர்களின் வாழ்க்கை காட்டுகிறது.
நண்பர்களே,
ஆன்மீகம் என்பது இந்தியாவின் பாரம்பரியத்தில் வேரூன்றி இருப்பது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்திய ஞானிகளும் கிரேக்க முனிவர்களும் அறிவார்ந்த மற்றும் ஆன்மீக பரிமாற்றங்கள் இருந்தன. புதிய யோசனைகளை அனுகுவதில் இந்தியாவின் வெளிப்படைத்தன்மை ரிக் வேதத்தை அடிப்படையாக கொண்டது.
இந்த தத்துவம்தான் நம்மை வழிநடத்திவருகின்றன. பல சமயங்கள் மற்றும் ஆன்மீக கிளைகளை இந்திய அன்னை பெற்றெடுத்துள்ளார். இதில் சில இந்திய எல்லைகள் தாண்டியும் சென்றுள்ளன.
அனைத்து மதத்தினரையும் வரவேற்பது, மரியாதை அளிப்பது கெளரவிப்பது என்ற இந்திய பாரம்பரியம் இந்தியாவை போலவே பழமையானது. சுவாமி விவேகானந்தர் கூறியது போல் “நாம் சகிப்புத்தன்மையை மட்டும் நம்புபவர்கள் அல்ல, அனைத்து மதமும் உண்மை என்பதை ஒப்புகொள்பவர்கள்.
சுவாமி விவேகானந்தர் நூறாண்டுக்களுக்கு முன்பு என்ன கூறினாரோ அது நன்மை அளிக்க கூடியது. அதனை இந்த நாட்டு மக்கள் மட்டும் அல்ல இந்த அரசாங்கமும் பின்பற்றும். இந்த விஷயத்தில் இந்த அரசு மட்டும் அல்ல எந்த அரசியல் கட்சியினால் அமைக்கப்பட்ட அரசானாலும் இதனை பின்பற்றும். அனைத்து மதங்களுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்ற இந்த கொள்கை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இதன் மூலம்தான் அது இந்திய அரசியலமைப்போடு ஒருங்கிணைந்தது. நமது அரசியலமைப்பு ஒரு வெற்றிடத்திலிருந்து உருவாகியது அல்ல. பண்டைய இந்தியாவின் கலாச்சார மரபுகளை அடிப்படியாக கொண்டுள்ளது.
மனதில் பயம் இல்லாமல் தலையை நிமிர்த்தி நாம் வாழும் ஒரு நாட்டை கணுவு காணுமாறு குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் கூறியுள்ளார். அந்த சுதந்திர சொர்கத்தை உருவாக்கி பாதுகாப்பது நமது கடமை. ஒவ்வொரு மதத்திலும் உண்மை இருக்கிறது என்பதை நாம் நம்புகிறோம்.
நண்பர்களே,
தற்போதய உலகில் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கு பிரச்சினையாக உள்ளவை பற்றி நாம் இப்போது பார்ப்போம். மதத்தை அடிப்படியாக கொண்டு உலக அளவில் பல பிரிவினைகளும் விரோதங்களும் காணப்படுகிறன. இது உலகளாவிய பிரச்சினையாக மாறிவிட்டது. இந்த சூழலில் அனைத்து மதங்களுக்கும் பரஸ்பர மரியாதை அளிக்க வேண்டும் என்ற பண்டைய இந்திய மரபு இப்போது உலக நெறிகளில் வெளிப்பட தொடங்கி உள்ளது.
பரஸ்பரம் மரியாதை உள்ள உறவுகள் வேண்டும் என்ற இந்த நீண்ட நாள் தேவையினைப் அடிப்படையாககொண்டு பத்தாவது “மனித உரிமையின் நம்பிக்கை” என்ற மதநல்லிணக்க மாநாடு டிசம்பர், 2008 ஹேக்கில் நடைப்பெற்றது. இது எதேச்சையாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்தின் 60 ஆண்டு விழாவோடு பொருந்தியுள்ளது.
உலகின் முக்கிய மதங்களைக் குறிக்கும் – கிறித்துவம், இந்து மதம், யூத மதம், , புத்த மதம், இஸ்லாமியம், தாவோயிஸம் மற்றும் பழங்குடியின மதத்தின் தலைவர்கள் இந்த மாநாட்டில் சந்தித்து விவாதங்கள் செய்து சர்வதேச பிரகடனத்தின் நம்பிக்கையை நிலைநாட்டுவோம் என்று உறுதியளித்துள்ளனர்.
தங்களது வரலாறு மிக்க அறிவிப்பில், அவர்கள் நம்பிக்கையின் சுதந்திரம் என்ன அதை எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துரைத்துள்ளனர்.
எந்த மதத்தினையும் நம்பிக்கையும் பின்பற்றி கொள்வது ஒரு தனி நபர் விருப்பம் என்று நாம் கருதுவோம்.
உலக நாடுகள் முக்கியமான முடிவெடுக்கும் தருணத்தில் உள்ளது. சரியான முடிவு எடுக்காவிட்டால் வைராக்கியம் நிறைந்த கலவர பூமியாக இது மாறும். உலகம் முன்றாவது ஆயிரமாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்த போது மதங்களுக்கிடையே அமைதியான ஒற்றுமை எட்டப்படவில்லை. இப்போது இந்த அமைதி எட்டப்படும் நிலையில் உள்ளது. உலகின் பிற நாடுகளும் புராதான இந்தியாவை பின்பற்றி வருகின்ற என்பதை இது உணர்த்துகிறது.
இந்தியா மற்றும் இந்திய அரசு பொருத்தவரை நான் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் எனது அரசு உறுதுணையாக இருக்கும். முழுமையான நம்பிக்கை, அனைவரும் தங்களுக்கு பிடித்த மதத்திற்கு தங்களை மாற்றிக் கொள்ளவோ அல்லது அதே மதத்தை பின்பற்றவோ முழு சுதந்திரத்தை எனது அரசு அளிக்கும். எந்தவித மத குழுக்களும் ஒருவருக்கொருவர் இடையே அல்லது பிற மத குழுக்களுக்கு இடையே வெறுப்பினை தூண்டும் வகையில் மேற்கொள்ளப்படும் செயல்களை எனது அரசு அனுமதிக்காது. அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதையை எனது அரசு அளிக்கும்.
புத்தரும் காந்தியும் பிறந்த நாடு இந்தியா ஒவ்வொரு இந்தியரின் ரத்த்த்திலும் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஒரு மதத்திற்கு எதிராக நடைப்பெறக் கூடிய வன்முறையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதுபோன்ற வன்முறை செயல்களுக்கு நான் கண்டனம் தெரிவிப்பேன். இதுபோன்ற விஷயங்களில் எனது அரசு வலுவாக செயல்படும்.
இந்த அர்பணிப்புடன், நமது அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல புராதான தேசத்தின் உண்மை உணர்வாக அனைத்து மதக்குழுக்களும் கட்டுப்பாட்டுடனும் பரஸ்பர உறவுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
நவீன இந்தியாவிற்காக எனக்கு கனவு உள்ளது. இந்த கனவை நனவாக்க நான் ஒரு மிகப்பெரிய இயக்கத்தை மேற்கொண்டுள்ளேன். என்னுடைய தாரக மந்திரம் வளர்ச்சியாகும்.
எளிய வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் ஒவ்வொரு மேஜையிலும் உணவு, ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளிக்கூடம் / கல்வி, ஒவ்வொருவருக்கும் வேலை, ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மின்சாரம் என்பதே. இது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும். நாம் ஒன்றாக செயல்பட்டால் இந்த இலக்கை அடையலாம். ஒற்றுமை நம்மை வலிமையாக்கும். பிரிவு நம்மை பலவீனமாக்கும். இந்த பெரிய பணியை முடிக்க எனக்கு உதவுமாறு இங்குள்ள அனைவரும், அனைத்து இந்தியர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
புனித சாவரா மற்றும் புனித யுவ்பராசியாவின் புனித தன்மையையும் நம்மை ஊக்குவிக்கும் வகையில் உள்ள அவர்களின் உயர்ந்த செயல்களும் மேன்மையும்:
மனவலிமையை அதிகரிக்கவும் இதனைப் பயன்படுத்தி, தன்னலமற்ற சேவையின் மூலம் சமூகத்தை மாற்றியமைக்கவும் வளர்ச்சியடைந்த நவீன இந்தியாவிற்கான நமது கூட்டு கனவை பூர்த்தி செய்யும் வகையில் நம்மை ஈர்க்கட்டும்.
நன்றி.