Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குன்னூரில் புதிய வைரல் தடுப்பு மருந்து உற்பத்திப் பிரிவு அமைப்பதற்கு இந்திய பாஸ்ச்சுவர் நிறுவனத்திற்கு 30 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


தமிழ்நாட்டின் குன்னூரில் புதிய வைரல் தடுப்பு மருந்து உற்பத்தி பிரிவு அமைப்பதற்கு இந்திய பாஸ்ச்சுவர் நிறுவனத்திற்கு 30 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யும் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், வைரல் தடுப்பு மருந்து (சின்னம்மை தடுப்பு மருந்து, மூளை வீக்கத்திற்கான தடுப்பு மருந்து), ஆண்டி சீரா (பாம்பு விஷம் மற்றும் நாய்க்கடிக்கு எதிரான மருந்து) ஆகியவை குன்னூரில் உள்ள இந்திய பாஸ்ச்சுவர் நிறுவனத்தில் தயாரிக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும். இத்திட்டத்திற்கான நிலம் இலவசமாக மாற்றித்தரப்படும்.

இத்திட்டத்திற்கான நிலம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தொழில் பிரிவிலிருந்து நிறுவனப் பிரிவுக்கு மாற்றப்படும்.

பலன்கள் :

இந்த நில ஒதுக்கீடு, குழந்தைகளுக்கான உயிர்காக்கும் தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதற்கும், நாட்டின் தடுப்பு மருந்து பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், செலவைக் குறைப்பதோடு தற்போது இறக்குமதி செய்யப்படும் இவற்றுக்கு மாற்றாகவும் அமையும்.