Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி – ஓர் ராஜதந்திரி” என்ற புகைப்பட புத்தகம் – பிரதமர் வெளியிட்டார்

“குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி – ஓர் ராஜதந்திரி” என்ற புகைப்பட புத்தகம் – பிரதமர் வெளியிட்டார்

“குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி – ஓர் ராஜதந்திரி” என்ற புகைப்பட புத்தகம் – பிரதமர் வெளியிட்டார்


புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி – ஓர் ராஜதந்திரி” (பிரசிடென்ட் பிரணாப் முகர்ஜி- ஏ ஸ்டேட்ஸ்மேன்) என்ற புகைப்பட புத்தகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அவருடைய பார்வையில் நமது சமூகம் மேலும் வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, வரலாறு சார்ந்த விசயங்களைப் பராமரிக்க வேண்டும் என்று கூறினார்.

குடியரசுத் தலைவர் பதவி வகித்தல் என்பது நடை முறைகளுக்கும் மேல் என்று குறிப்பிட்ட பிரதமர் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள நமது குடியரசுத் தலைவரின் மனித நேயப் பக்கத்தை எடுத்துரைக்கும் புகைப்படங்கள் நமக்கு பெருமை அளிக்கிறது என்றார்.

மகாத்மா காந்தியின் இரு புகைப்படங்கள்; துடைப்பத்துடனும், நுண்ணோக்கி வழியாக பார்க்கும் புகைப்படமும் அவரின் பன்முகத் தன்மையைக் காட்டுகிறது என்றார்.

ஒரு தலைவரின் ஒரு சில பக்கத்தை மட்டுமே செய்தித்தாள்கள் வெளியிடுகின்றன. ஆனால் அதையும் தாண்டி தலைவருக்கு பல குணங்கள் உள்ளன என்று பிரதமர் கூறினார்.

திரு. பிரணாப் முகர்ஜியுடன் இணைந்து பணியாற்றியது தனக்கு கிடைத்த பெரும் பேறாக அமைந்தது என்று பிரதமர் கூறினார். அவருடைய அனுபவங்களை நினைவு கூறிய பிரதமர், பலமுறை தான் பல்வேறு சிந்தனைகள் கொண்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார். தான் தில்லி வந்தபோது பிரணாப் என்ற மூத்த சகோதரரின் வழிகாட்டுதல் பெற்றதை என்றும் மறக்க முடியாது என்று பிரதமர் கூறினார். தந்தை ஸ்தானத்தில் இருந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எனக்கு வழிகாட்டியுள்ளார் என்றும் கூறினார். தேவையான அளவு ஓய்வு எடுக்கவும் தனது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும் என்றும் குடியரசுத் தலைவர் என்னிடம் கூறியுள்ளார் என்று பிரதமர் கூறினார்.

***