Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் 4ஆம் தொகுப்பை பிரதமர் வெளியிட்டார்


குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் 4ஆம் தொகுப்பினை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் இன்று வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், குடியரசுத் தலைவரிடம் இருந்து தாம் பெற்ற வழிகாட்டுதல்கள் தனக்கு பெரிதும் உதவும் என்றார். அவருடன் இணைந்து பணியாற்றியவர்களும் இதையே உணர்வார்கள் என்றும் அவர் கூறினார்.

திரு. பிரணாப் முகர்ஜி மிகவும் அறிவாளி என்றும் மிகவும் எளிமையானவர் என்றும் குறிப்பிட்ட பிரதமர், எப்போதெல்லாம் தான் அலுவல் சார்ந்த விவகாரங்கள் குறித்து அவரிடம் விவாதித்தாலும், குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி அவருக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்குவதுடன் ஆக்கபூர்வமான பின்னூட்டங்களை வழங்குவார் என்றார்.

திரு. பிரணாப் முகர்ஜியின் கீழ் குடியரசுத் தலைவர் மாளிகை ‘மக்கள் மாளிகை’ ஆனது என்று குறிப்பிட்ட பிரதமர், திரு பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலத்தில் வரலாற்றுப் பூர்வமான ஆவணப்படுத்துதல் என்ற பொக்கிஷம் ஏற்படுத்தப்பட்டது என்றார். இதற்காக திரு. பிரணாப் முகர்ஜியையும் அவரது சகாக்களையும் அவர் பாராட்டினார்.