Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் தலைவராக திரு. ராம் நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்து


இந்திய குடியரசுத் தலைவராக திரு. ராம் நாத் கோவிந்த் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவராக திரு. ராம் நாத் கோவிந்த் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகள். சிறந்த மற்றும் எழுச்சியூட்டும் வகையில் அவரது பதவிக் காலம் அமைய வாழ்த்துகள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் திரு. ராம் நாத் கோவிந்த்க்கு வழங்கப்பட்ட பெரும் ஆதரவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வாக்காளர் குழுவிற்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம் அனைவரும் பெருமைப்படும் ஜனநாயக பண்பாட்டின் எடுத்துக்காட்டாக திருமதி மீரா குமார் அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கும் எனது வாழ்த்துகள் என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****