மிக உயரிய விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் திமோர்-லெஸ்டே விருதை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிற்கு வழங்கி அங்கீகரித்திருப்பது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.இந்த பெருமைமிகு கவுரவம் இந்தியாவுக்கும் தைமோர் – லெஸ்டேவுக்கும் இடையே ஆழமாக வேரூன்றியுள்ள உறவுகள் மற்றும் பரஸ்பர மரியாதையை எடுத்துக்காட்டுகிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி கூறியதாவது:
“குடியரசுத்தலைவருக்கு கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் திமோர்-லெஸ்டே விருது அளிக்கப்பட்டு அவர் கௌரவிக்கப்படுவதைப் பார்ப்பது நமக்குப் பெருமையான தருணம். இது இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான உறவுகளையும், பரஸ்பர மரியாதையையும் பிரதிபலிக்கிறது. பல ஆண்டுகளாக பொது வாழ்வில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்கான அங்கீகாரமாகவும் இது கருதப்படுகிறது.”
****
RB/DL
It is a proud moment for us to see Rashtrapati Ji being honoured with the Grand-Collar of the Order of Timor-Leste, the nation’s highest civilian award.
— Narendra Modi (@narendramodi) August 11, 2024
This reflects the strong ties and mutual respect between our countries. It is also a recognition of her monumental… pic.twitter.com/t7UgmwcEtu