Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத்தலைவருக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்து


சுரினாம் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார் விருது குடியரசுத்தலைவருக்கு வழங்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவரின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“சுரினாம் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார் விருது குடியரசுத்தலைவர் அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கு நல்வாழ்த்துகள். சுரினாம் நாட்டின் அரசு மற்றும் மக்களின் இந்த சிறப்புமிக்க செயல், நமது நாடுகள் இடையேயான நீடித்த நட்புணர்வை எடுத்துரைக்கிறது.”

***

AD/BR/RK