Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடிமைப் பணி தினத்தையொட்டி குடிமைப் பணி அதிகாரிகளிடையே பிரதமர் ஆற்றிய உரை

குடிமைப் பணி தினத்தையொட்டி குடிமைப் பணி அதிகாரிகளிடையே பிரதமர் ஆற்றிய உரை

குடிமைப் பணி தினத்தையொட்டி குடிமைப் பணி அதிகாரிகளிடையே பிரதமர் ஆற்றிய உரை

குடிமைப் பணி தினத்தையொட்டி குடிமைப் பணி அதிகாரிகளிடையே பிரதமர் ஆற்றிய உரை


பிரதமர்  திரு. நரேந்திர மோடி  குடிமைப்  பணி  தினத்தையொட்டி  அதிகாரிகளிடையே  இன்று  உரை  நிகழ்த்தினார்.  பாராட்டு, மதிப்பீடு, சுயபரிசோதனை  ஆகியவற்றுக்கான  நேரம்  இது  என்றும்  பிரதமர்  விருது  என்பது  அரசு  அதிகாரிகளுக்கு  ஊக்கமளிப்பதற்கான  ஒரு முயற்சி  என்றும்  பிரதமர்  கூறினார்.  விருது   பெற்றவர்களுக்கு  வாழ்த்துக்களையும்  அவர்  தெரிவித்தார்.  அரசின்  முன்னுரிமைகளை சுட்டிக்  காட்டும்  வகையில்  இந்த  விருதுகள்  அமைகின்றன  என்றும்  அவர்  குறிப்பிட்டார்.

இந்த  விருதுகள்  வழங்கப்பட்டுள்ள  முன்னுரிமை  திட்டங்களான   பிரதமர்  விவசாய  மேம்பாட்டு  திட்டம்,  தீன் தயாள் உபாத்யாய கவுசல்யா திட்டம்,  பிரதமர் வீட்டுவசதித் திட்டம்,  டிஜிட்டல் முறை பணப் பரிமாற்றம்  ஆகியவை  புதிய  இந்தியாவிற்கான  மிக முக்கியமான  திட்டங்கள்  என்றும்  அவர்  குறிப்பிட்டார். பிரதமர்  விருதுகள்,  மாவட்டங்களில்  மேற்கொள்ளப்படும்  முன்முயற்சிகள் ஆகியவை  குறித்த  இரு  நூல்கள்  இன்று  வெளியிடப்பட்டுள்ளதையும்  அவர்  சுட்டிக்  காட்டினார்.

ஆர்வமிக்க  இந்த  115  மாவட்டங்கள்  குறித்துப்  பேசுகையில்  மாவட்டங்களும்  அந்தந்த  மாநிலங்களின்  வளர்ச்சிக்கான  உந்துசக்தியாக மாறும்  என்றும்  பிரதமர்  குறிப்பிட்டார்.  வளர்ச்சியில்  பொதுமக்களின்  பங்கேற்பின்  முக்கியத்துவத்தையும்  அவர்  வலியுறுத்தினார்.  2022 ஆம் ஆண்டு,  அதாவது  இந்திய விடுதலையின்  75 வது  ஆண்டு  விழா  என்பது  நமது  விடுதலைப்  போராட்ட  வீரர்கள்  கண்ட  கனவு இந்தியாவை  சென்றடைவதை  நோக்கிச்  செயல்படுவதற்கு  உத்வேகமாக  மாற  முடியும்  என்றும்  அவர்  கூறினார்.

விண்வெளி  தொழில்நுட்பம்  உள்ளிட்ட  நம்மிடமுள்ள  அனைத்து  தொழில்நுட்பங்களும்  அரசு  நிர்வாகத்தை  மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்  என்றும்  பிரதமர்  வலியுறுத்தினார்.  உலகம்  முழுவதிலும்  உருவாகி  வரும்  தொழில்நுட்பங்களோடு இணைந்து  செயல்பட  அரசு  அதிகாரிகள்  தங்களை  தயார்ப்படுத்திக்  கொள்வது  முக்கியம்  என்றும்  அவர்  குறிப்பிட்டார்.

மிகப் பெரும்  பொறுப்புகளை  வகிக்கும்  நாட்டின்  அரசு  அதிகாரிகளும்  குடிமக்கள்தான்  என்று  வர்ணித்த  அவர்,  நாட்டின்  நலனுக்கு  இந்தத்  திறமைகள்  பெருமளவிற்கு  உதவி  செய்யும்  என்றும்  தெரிவித்தார்.

 

******