Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடிமைப்பணிகள் சேவை தினத்தன்று பிரதமர் குடிமைப்பணி சேவைகள் அலுவலர்களுக்கு விருது வழங்கி உரையாற்றினார்

குடிமைப்பணிகள் சேவை தினத்தன்று பிரதமர் குடிமைப்பணி சேவைகள் அலுவலர்களுக்கு விருது வழங்கி உரையாற்றினார்


பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று குடிமைப்பணி சேவை அலுவலர்களுக்கு விருது வழங்கி உரையாற்றினார்.

இந்த தினத்தை மறு அர்ப்பணிப்பு தினம் என்று குறிப்பிட்ட பிரதமர் குடிமைப்பணி சேவை அலுவலர்கள் தங்களது பலம், திறன், சவால்கள் மற்றும் பொறுப்புகள் என்னவென்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளனர் என்று கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையும் இப்போது உள்ள நிலைமையும் மிகவும் வேறுபட்டவை ஆகும், வரும் சில ஆண்டுகளில் இந்த நிலைமை மேலும் மாறும். இது குறித்து விவரமாகப் பேசிய பிரதமர் முன்பு அரசு மட்டுமே பொருட்கள் மற்றும் சேவைகளை மக்களுக்கு வழங்கும் நிறுவனமாக இருந்தது. இதனால் சிலர் நலத்திட்டங்களில் இருந்து விடுபட்டும் சிலர் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டும் சில குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருந்தது. ஆனால் இன்று அரசு நிறுவனத்தைவிட தனியார் நிறுவனங்கள் சிறந்த சேவைகளை வழங்குவதாக மக்கள் உணர்கிறார்கள் என்று கூறினார். பல்வேறு துறைகளில் மாற்று வாய்ப்புகள் இருப்பதால் அரசு அலுவலர்களின் பொறுப்புகள் அதிகரித்துள்ளது என்பதைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். இதனால் அதிகரித்தது அரசு ஊழியர்களின் வேலை வாய்ப்பல்ல, அதிகரித்தது வேலையில் உள்ள சவால்கள் என்றும் அவர் கூறினார்.

நல்ல தரமான மாற்றம் உருவாவதற்கு போட்டிகள் முக்கியம் என்பதை பிரதமர் வலியுறுத்தினார். வெகுவிரைவில் அரசின் அணுகுமுறை கட்டுப்பாட்டாளராக இல்லாமல் உதவியாளராக மாறும். போட்டிகள் மூலம் ஏற்படும் சவால்கள் விரைவில் சந்தர்ப்ப வாய்ப்புகளாக மாறும்.

திட்ட நடவடிக்கை அல்லது துறைகளில் அரசின் தலையீடு இல்லாதது உணரக்கூடிய அளவுக்கு இருக்க வேண்டும். அதே சமயம் ஒரு துறையில் அரசின் பங்களிப்பு சுமையாக மாறிவிடக் கூடாது என்று கூறிய பிரதமர் இத்தகைய நிலமையைக் கொண்டுவர குடிமைப் பணியாளர்கள் பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குடிமைப்பணிகள் சேவை தின விருதுகளுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 100 ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 500 ஆக அதிகரித்திருப்பதை எடுத்துக் காட்டிய பிரதமர் தற்போது தரம் மேம்பாடு மற்றும் சிறப்பான பழக்கங்களை உருவாக்குவதில் நமது கவனம் இருக்க வேண்டும் என்று கூறினார்.

தனது அனுபவம் இளம் அதிகாரிகளின் புதுமையான அணுகுமுறைக்கு ஒரு சுமையாக மாறாமல் மூத்த அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தான் யார் என்று அடையாளம் தெரியாமல் இருப்பதுதான் குடிமைப்பணியின் அதிக பலமாகும் என்று பிரதமர் கூறினார். சமூக ஊடகம் மற்றும் கைபேசி அரசாட்சிமுறை ஆகியவை மக்களை அரசில் திட்டங்களுடன் இணைத்து அதிகப் பயன்பாடுகளை கொடுத்தாலும் சமூக ஊடகங்களின் பயன்பாடு குடிமைப்பணி வலிமையை ஒருபோதும் குறைத்துவிடக் கூடாது என்று அலுவலர்களை பிரதமர் எச்சரிக்கை செய்தார்.

சீர்திருத்தம் செயல்திறன் மற்றும் மாற்றம் குறித்து பேசிய பிரதமர் சீர்திருத்தத்திற்கு அரசியல் விருப்பம் தேவை. ஆனால் செயல்திறன் குடிமைப் பணியாளர்களிடமிருந்தும் மாற்றம் மக்களின் பங்கேற்பிலும்தான் உள்ளது என்று பிரதமர் கூறினார்.

ஒவ்வொரு முடிவுகளும் தேசிய நலனை மனதில் கொண்டு எடுக்கப்படுகிறது என்பதை குடிமைப் பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் ஒரு முடிவை எடுக்க இதுவே அளவு கோலாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

2022 – ம் ஆண்டு நாம் நாட்டின் 75 –ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம் என்பதை நினைவு கூர்ந்த பிரதமர் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நினைவாக்க குடிமைப் பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் முக்கிய முகவர்களாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

***