வணக்கம், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நிலைகளில் உள்ள வெவ்வேறு பணியிடங்களுக்கான நியமன கடிதங்களைப் பெற்றுள்ளவர்களுக்கு வாழ்த்து. புனித நாளான தந்தேரா அன்று தேசிய அளவில் நாடு முழுவதும் 75,000 விண்ணப்பதாரர்களுக்கு நியமன கடிதங்களை வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. இதேபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நடத்தப்படுகிறது. குஜராத் மாநிலம் விரைவாக முன்னேறி வருகிறது. இத்தகைய துரிதமான நடவடிக்கையை மேற்கொண்ட குஜராத் மாநில முதல்வருக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுகள். அண்மை காலங்களில் குஜராத் மாநிலத்தில் 10,000 இளைஞர்களுக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதோடு அடுத்த ஓராண்டில் 35,000 இடங்களை நிரப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகளும், சுய வேலை வாய்ப்புகளும் உருவாவதற்கு மாநிலத்தின் புதிய தொழில்துறை கொள்கை தான் முக்கிய காரணம். ஓஜாஸ் போன்ற டிஜிட்டல் தளங்களும், 3 மற்றும் 4-ஆம் நிலை இடங்களுக்கான நேர்காணல் முறை நீக்கமும் பாராட்டுக்குரியன.“அனுபந்தம்” செல்பேசி செயலி மற்றும் வேலை வாய்ப்பு இணையதளம் முதலியவற்றின் வாயிலாக மாநிலத்தில் வேலை தேடுபவர்களும், பணியமர்த்தும் நிறுவனங்களும் சுமூகமாக இணைக்கப்படுகின்றன. அதேபோல குஜராத் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விரைவான பணி நியமன மாதிரி தேசிய அளவில் பாராட்டப்படுகிறது.
இதேபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் வரும் மாதங்களில் தேசிய மற்றும் மாநில அளவுகளில் தொடர்ந்து நடத்தப்படும். 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசு பணியாற்றி வரும் வேளையில், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்தப் பிரச்சாரத்தில் இணைவதன் காரணமாக வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயரும். கடைக் கோடியில் உள்ள நபரையும் பிரச்சாரம் சென்றடைவதையும், அரசு திட்டங்களின் பலன்கள் முழுமையாக நிறைவடைவதையும் இது பெருமளவில் உறுதி செய்யும்.
2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக முன்னேறும் இந்தியாவின் உறுதிபாட்டில் இளைஞர்களின் முக்கிய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். சமூகத்திற்கும், நாட்டிற்குமான உங்களது கடமையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். வேலை கிடைப்பதை தங்கள் முன்னேற்றத்தின் இலக்காகக் கொண்டிராமல் இளைஞர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டு, திறன் பெற வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. உங்கள் வேலையை முழு அர்ப்பணிப்புடன் நீங்கள் செய்யும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத திருப்தி உங்களுக்கு ஏற்படுவதோடு வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பாதையும் வகுக்கப்படும். நன்றி!
(Release ID: 1871810)
**************
My remarks at the Gujarat Rozgar Mela. Congratulations to the newly inducted appointees. https://t.co/IGwKXdwnRP
— Narendra Modi (@narendramodi) October 29, 2022