Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி அனுமன் சிலையை திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி அனுமன் சிலையை திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்


வணக்கம்!

மகா மண்டலேஸ்வர் கங்கேஸ்வரி தேவி அவர்களே, ராம கதை நிகழ்ச்சியுடன் சம்பந்தப்பட்டவர்களே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் துறவிகளே, கல்வியாளர்களே, பக்தர்களே. உங்கள் அனைவருக்கும் வணக்கம். மங்களகரமான அனுமன் ஜெயந்தியையொட்டி நாட்டுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான நிகழ்ச்சியில் பிரம்மாண்டமான அனுமன் சிலை திறந்துவைக்கப்படுவது நாடு முழுவதும் உள்ள ராம பக்தர்களையும், அனுமன் பக்தர்களையும் பெருமகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

நண்பர்களே,

கடவுளின் அருள் இல்லாமல் துறவிகளை தரிசிப்பது அரிதாகும். அதிர்ஷ்டவசமாக கடந்த சில தினங்களாக அம்பாஜி மாதா, உமியா மாதா, அன்னபூர்ணா மாதா ஆகியோரின் அருளை பெறும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். இன்று அனுமனுடன் தொடர்பு கொண்ட துறவிகளின் அருளும் எனக்கு கிட்டியுள்ளது.

நாட்டின் நான்கு மூலைகளிலும் இதுபோன்ற நான்கு சிலைகளை நிறுவும் திட்டம்ஒரே பாரதம் ஒப்பற்ற பாரதம்என்ற உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும். அனுமன் தமது சேவை மனப்பான்மையால் அனைவரையும் ஒன்றிணைக்கிறார். ஆஞ்சநேயர் காடுகளில் வசிக்கும் சமூகங்களுக்கு கண்ணியத்தையும் அதிகாரத்தையும் பெற்ற வலிமையின் சின்னமாகும். ஒரே பாரதம் ஒப்பற்ற பாரதத்தின் முக்கிய பிணைப்பாக ஆஞ்சநேயர் திகழ்கிறார்.

அதேபோல், நாடு முழுவதும் பல்வேறு வட்டாரங்களிலும் மொழிகளிலும் உள்ள ராமர் சரித்திரம், கடவுள் பக்தியில் அனைவரையும் ஒன்றாக இணைக்கிறது. இதுவே, நமது ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பலம். அடிமைத்தனத்தின் கடினமான காலத்திலும் தனித்தனி பகுதிகளை இது ஒன்றிணைத்தது. சுதந்திரத்திற்கான தேசிய உறுதிமொழியின் ஒருங்கிணைந்த முயற்சிகளை இது வலுப்படுத்தியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் இடையூறுகளை எதிர்கொண்டு, இந்தியாவை உறுதியுடன் வைத்திருப்பதில் நமது நாகரிகமும் கலாச்சாரமும் பெரும் பங்காற்றியுள்ளன.

முழுத் திறமையுடையவராக பகவான் ராமர் இருந்தபோதிலும், ஒவ்வொருவரின் பலத்தையும் சிறப்பாகப் பயன்படுத்தியதில் இது பிரதிபலிக்கிறது. அனைவருடன்அனைவரின் முயற்சி என்பதற்கு ராமரின் சரித்திரம் ஒரு சிறந்த உதாரணம், அனுமனுக்கு இதில் முக்கிய பங்குண்டு.

விபத்தின் போது கற்றுக்கொண்ட பாடங்கள் கட்ச் நிலநடுக்கத்தின் போதும் உதவியது. மோர்பி இன்று தொழில்துறையின் செழிப்பான மையமாக இருப்பதால் அது முன்னேற்றமடைந்து வருகிறது. ஜாம்நகரில் பித்தளை, ராஜ்கோட்டில் பொறியியல் மற்றும் மோர்பியில் கடிகார தொழில் ஆகியவற்றைப் பார்த்தால், மினி ஜப்பான் போன்ற உணர்வைத் தருகிறது.

#Hanumanji4dham திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் நான்கு திசைகளிலும் அமைக்கப்பட்டுள்ள 4 சிலைகளில் இரண்டாவது சிலை இன்று திறக்கப்பட்டது. மேற்கில் மோர்பியில் உள்ள பரம் பூஜ்ய பாபுகேஷ்வானந்த் ஜியின் ஆசிரமத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.

இத்தொடரின் முதல் சிலை வடக்கே சிம்லாவில் 2010-ல் அமைக்கப்பட்டது. தெற்கில் ராமேஸ்வரத்தில் சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

 

*****

(Release ID: 1817285)