குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர்கள் திரு சி.ஆர். பாட்டீல், திருமிகு நிமுபென் அவர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, மாவட்ட நீதிபதிகளே, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்துள்ள மாவட்ட ஆட்சியர்களே, இதர மதிப்பிற்குரிய விருந்தினர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே!
இன்று, குஜராத் மண்ணிலிருந்து ஜல் சக்தி அமைச்சகம் ஒரு முக்கியமான முன்முயற்சியைத் தொடங்குகிறது. நீர் சேமிப்பு என்பது கொள்கைகள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, சமூக உறுதிப்பாடும் கூட. பொதுமக்களிடையே விழிப்புணர்வு, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் வெகுஜன இயக்கம் ஆகியவை இந்த முன்முயற்சியின் மிகப்பெரிய பலங்கள். பல பத்தாண்டுகளாக தண்ணீர் மற்றும் நதிகள் தொடர்பாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்ததை நீங்கள் நினைவுகூரலாம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில்தான் உறுதியான முடிவுகளை நாம் கண்டிருக்கிறோம். எங்கள் அரசு முழு சமூகம் மற்றும் முழு அரசு அணுகுமுறையுடன் பணியாற்றியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக, தண்ணீர் பிரச்னை தொடர்பான தடைகள் உடைக்கப்பட்டன. முழு அரசின் உறுதிப்பாட்டுடன் ஜல் சக்தி என்ற தனி அமைச்சகத்தை நாங்கள் உருவாக்கினோம். முதன்முறையாக, ஜல் ஜீவன் இயக்கம் மூலம் ‘ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர்’ என்ற உறுதிமொழியை நாடு எடுத்துள்ளது. முன்னதாக, நாட்டில் 3 கோடி வீடுகள் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் பெற்றன. இன்று, 15 கோடிக்கும் அதிகமான கிராமப்புற வீடுகள் குழாய் மூலம் குடிநீர் பெறுகின்றன. இந்த இயக்கம் மூலம், நாட்டில் 75 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு சுத்தமான நீர் சென்றடைந்துள்ளது. உள்ளூர் நீர் குழுக்கள் இப்போது ஜல் ஜீவன் இயக்கத்தின் பொறுப்புகளைக் கையாளுகின்றன. குஜராத்தில் நீர் குழுக்கள் திட்டத்தில் பெண்கள் சிறந்து விளங்கியதைப் போலவே, பெண்கள் இப்போது நாடு முழுவதும் இந்தத் திட்டத்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்தக் குழுக்களின் பங்கேற்பவர்களில் குறைந்தது 50 சதவீதம் பேர் கிராமப் பெண்கள்.
சகோதர சகோதரிகளே,
இன்று, ஜல் சக்தி இயக்கம் ஒரு தேசிய இயக்கமாக மாறியுள்ளது. பாரம்பரிய நீர் ஆதாரங்களை புதுப்பிப்பதாக இருந்தாலும் அல்லது புதிய கட்டமைப்புகளை நிர்மாணிப்பதாக இருந்தாலும், பங்குதாரர்கள் முதல் சிவில் சமூகம் மற்றும் பஞ்சாயத்துகள் வரை அனைவரும் ஈடுபட்டுள்ளனர். சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவத்தின் போது மக்களின் பங்களிப்பு மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமிர்த நீர்நிலைகளை உருவாக்கும் பணியையும் நாங்கள் தொடங்கினோம். இந்த முயற்சியின் கீழ், மக்களின் பங்களிப்பு மூலம் நாடு முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட அமிர்தம் நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நமது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு இது எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்.
இந்த மக்கள் பங்களிப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நமது தொழில்துறையிலிருந்தும் வருகிறது. இன்று, நிகர பூஜ்ஜிய திரவ வெளியேற்ற தரநிலைகள் மற்றும் நீர் மறுசுழற்சி இலக்குகளைப் பூர்த்தி செய்த தொழில்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பல தொழிற்சாலைகள் தங்கள் பெருநிறுவன சமூக பொறுப்புகளின் (சி.எஸ்.ஆர்) ஒரு பகுதியாக நீர் பாதுகாப்பு முயற்சிகளைத் தொடங்கியுள்ளன. இப்போது, ஜல் சக்தி அமைச்சகமும் குஜராத் அரசும் இணைந்து ‘ஜல் சஞ்சய்-ஜன் பாகிதாரி அபியான்’ இன் கீழ் இதுபோன்ற 24,000 கட்டமைப்புகளை உருவாக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. இந்த இயக்கமே எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களும் இதே போன்ற முயற்சிகளை மேற்கொள்ள ஊக்கமளிக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும். நாம் அனைவரும் இணைந்து பாரதத்தை மனிதகுலம் முழுவதற்கும் நீர் சேமிப்புக்கான உத்வேகம் அளிக்கும் கலங்கரை விளக்கமாக மாற்றுவோம் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன், இந்த இயக்கம் வெற்றிபெற உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் நன்றி.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2052503
*****
RB/DL
भारत में जनभागीदारी और जनआंदोलन से जल संरक्षण और प्रकृति संरक्षण का अनूठा अभियान चल रहा है। आज गुजरात के सूरत में 'जल संचय जनभागीदारी पहल' का शुभारंभ कर अत्यंत हर्ष की अनुभूति हो रही है।https://t.co/Qg27AbPj1f
— Narendra Modi (@narendramodi) September 6, 2024
जल-संचय, ये केवल एक पॉलिसी नहीं है।
— PMO India (@PMOIndia) September 6, 2024
ये एक प्रयास भी है, और पुण्य भी है: PM @narendramodi pic.twitter.com/fhIVxklUSE
जल संरक्षण, प्रकृति संरक्षण… ये भारत की सांस्कृतिक चेतना का हिस्सा है। pic.twitter.com/Y45EHSFzU0
— PMO India (@PMOIndia) September 6, 2024
जल-संरक्षण केवल नीतियों का नहीं, बल्कि सामाजिक निष्ठा का भी विषय है: PM @narendramodi pic.twitter.com/ebCKjDemdi
— PMO India (@PMOIndia) September 6, 2024
जल संचय सिर्फ एक अभियान नहीं, बल्कि यह जनभागीदारी और उत्तरदायित्व का संकल्प भी है। pic.twitter.com/6YHSRkJzpf
— Narendra Modi (@narendramodi) September 6, 2024
हमारी संस्कृति में जल को ईश्वर का रूप कहा गया है। जिस राष्ट्र का चिंतन इतना दूरदर्शी और व्यापक हो, उसे जल संकट का हल खोजने के लिए दुनिया में सबसे आगे खड़ा होना ही होगा। pic.twitter.com/u6fhXZzF8x
— Narendra Modi (@narendramodi) September 6, 2024
गुजरात में जैसे पानी समिति में महिलाओं ने कमाल किया था, वैसे ही अब पूरे देश में पानी समिति में महिलाएं शानदार काम कर रही हैं। pic.twitter.com/bt7EWquk4e
— Narendra Modi (@narendramodi) September 6, 2024
आज 140 करोड़ देशवासियों की भागीदारी से जल संरक्षण के कई अभियान जन-आंदोलन बनते जा रहे हैं। pic.twitter.com/wkhXXd5BmT
— Narendra Modi (@narendramodi) September 6, 2024
जल-संचयन के लिए आज हमें Reduce, Reuse, Recharge और Recycle के मंत्र पर आगे बढ़ने की जरूरत है। pic.twitter.com/SjQk5vcMOA
— Narendra Modi (@narendramodi) September 6, 2024