காந்திநகர் ரயில் நிலையத்துக்கு பிரதமர் வந்தபோது, அவருடன் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்வ்ரத், ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் உடன் இருந்தனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0-வின் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்த பிரதமர், அதன் வசதிகளை பார்வையிட்டார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0–ன் இன்ஜின் கட்டுப்பாட்டு மையத்தையும் திரு மோடி ஆய்வு செய்தார்.
பின்னர் காந்திநகர் மற்றும் மும்பை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரசின் புதிய & மேம்படுத்தப்பட்ட ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்து, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்தார். ரயில்வே ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், பெண் தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், இளைஞர்கள் உட்பட தனது சக பயணிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். வந்தே பாரத் ரயில்களை வெற்றிபெறச் செய்ய உழைத்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுடனும் அவர் உரையாடினார்.
காந்திநகர் மற்றும் மும்பை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0 பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் இரண்டு வணிக மையங்களுக்கிடையேயான இணைப்பை அது அதிகரிக்கும். இது குஜராத்தில் இருந்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மும்பைக்கு பயணிக்க உதவும், மேலும் விமானத்தில் கிடைக்கும் வசதிகளைப் போல குறைந்த செலவில் மும்பைக்கு பயணிக்க இது உதவும். காந்திநகரில் இருந்து மும்பைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0 இன் ஒருவழிப்பயண நேரம் சுமார் 6-7 மணிநேரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0 எண்ணற்ற சிறந்த, விமானப்பயணம் போன்ற பயண அனுபவங்களை வழங்குகிறது. இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரயில் ஆகும். மோதல் தவிர்ப்பு அமைப்பு – கவாச் உள்ளிட்ட மேம்பட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
வந்தே பாரத் 2.0 ரயில், 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்வது போன்ற மேம்பட்ட அம்சங்களை கொண்டது, இதன் எடை 430 டன்களுடன் ஒப்பிடும் போது 392 டன் எடை கொண்டதாக இருக்கும். இது தேவைக்கேற்ப Wi-Fi உள்ளடக்க வசதியையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 32″ திரைகள் பொருத்தப்பட்டுள்ளன, இது முந்தைய பதிப்பில் இருந்த 24″ உடன் ஒப்பிடும்போது பயணிகளுக்கு தகவல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் வழங்கும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும், ஏனெனில் ஏசிகள் 15 சதவீதம் அதிக ஆற்றல் திறன் கொண்டதாக இருக்கும். இழுவை மோட்டாரின் தூசி இல்லாத சுத்தமான காற்று குளிர்ச்சியுடன், பயணம் மிகவும் வசதியாக இருக்கும். முன்பு எக்சிகியூட்டிவ் வகுப்பு பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த பக்கவாட்டு சாய்வு இருக்கை வசதி இப்போது அனைத்து வகுப்புகளுக்கும் கிடைக்கும். எக்ஸிகியூட்டிவ் கோச்சுகளில் 180 டிகிரி சுழலும் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன
வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் புதிய வடிவமைப்பில், காற்றைச் சுத்திகரிப்பதற்காக கூரை-மவுண்டட் பேக்கேஜ் யூனிட்டில் புகைப்பட-வினையூக்கி புற ஊதா காற்று சுத்திகரிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு பரிந்துரைத்தபடி, இந்த அமைப்பு ஆர்எம்பியூ–வின் இரு முனைகளிலும் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டு, கிருமிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும். மேலும் காற்றை வடிகட்டி சுத்தம் செய்கிறது.
**************
(Release ID: 1863626)
PM @narendramodi is on board the Vande Bharat Express from Gandhinagar to Ahmedabad. People from different walks of life, including those from the Railways family, women entrepreneurs and youngsters are his co-passengers on this journey. pic.twitter.com/DzwMq5NSXr
— PMO India (@PMOIndia) September 30, 2022