Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் உயர்நீதிமன்ற வைரவிழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்

குஜராத் உயர்நீதிமன்ற வைரவிழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்


மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் திரு.விஜய் ரூபானி அவர்களே, உச்சநீதிமன்ற நீதிபதி திரு.எம்.ஆர்.ஷா அவர்களே, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. விக்ரம் நாத் அவர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகளே, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் திரு. துஷார் மேத்தா அவர்களே, குஜராத் அரசின் தலைமை வழக்கறிஞர் திரு.கமல் திரிவேதி மற்றும் வழக்கறிஞர்களே, சகோதரிகளே, சகோதரர்களே!   

குஜராத் உயர்நீதிமன்ற வைரவிழாவை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்கடந்த 60 ஆண்டுகளில்குஜராத் உயர்நீதிமன்றமும், வழக்கறிஞர்களும், தங்களது சட்டப் புரிந்துணர்வு, புலமை மற்றும் அறிவாற்றல் மூலம், தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளனர்நீதியையும், நேர்மையையும் நிலைநாட்ட குஜராத் உயர்நீதிமன்றம் மனசாட்சியுடன் பணியாற்றியிருப்பதோடு, அரசியல் சாசனக் கடமைகளை நிறைவேற்ற ஆயத்தமாக இருப்பதை வெளிப்படுத்தியிருப்பதுஇந்திய நீதித் துறை மற்றும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தியிருக்கிறதுகுஜராத் உயர்நீதிமன்றத்தின் பயணத்தை நினைவுகூறும் விதமாக, அஞ்சல் தலை ஒன்றும், இன்று வெளியிடப்பட்டுள்ளதுஇந்த சந்தர்ப்பத்தில்அனைத்து நீதிபதிகள் மற்றும் குஜராத் மக்களுக்கு எனது நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

மாண்புமிகு நீதிபதிகளேநமது அரசியல் சாசனத்தின்படி, சட்டமியற்றும் அமைப்புகள், நிர்வாகம் மற்றும் நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள், அரசியல் சாசனத்தின் சுவாசக்காற்று போன்றதுதற்போது, அரசியல் சாசனத்தின் சுவாசக்காற்றைப் பாதுகாக்க, நமது நீதித்துறை அதன் பொறுப்புகளை உறுதியுடன் நிறைவேற்றி இருப்பதை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மனநிறைவுடன் கூறமுடியும்.   உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான விளக்கங்கள் வாயிலாக, நமது நீதித்துறை, அரசியல் சாசனத்தை எப்போதும் வலுப்படுத்தி வருகிறது.   நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாக இருந்தாலும் சரி, அல்லது தனிநபர் சுதந்திரம் அல்லது நாட்டுநலன் தொடர்பான சூழ்நிலைகளுக்கு உரிய முன்னுரிமை அளித்து வருவதோடு, இதுபோன்ற கடமைகளை நிறைவேற்றுவதை நீதித்துறை ஏற்றுக் கொண்டுள்ளது

இந்திய சமுதாயத்தில், சட்டத்தின் ஆட்சி என்பது, நமது பல நூறு ஆண்டுகால நாகரீகம் மற்றும் சமூகக் கட்டமைப்பிற்கு அடிப்படைக் கலாச்சாரமாக திகழ்வதை, நாம் அனைவரும் நன்கு அறிவோம்.   இது பற்றி நமது பண்டைக்கால  ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது வருமாறு :  ‘न्यायमूलं सुराज्यं स्यात्‘   அதாவது, நல் ஆளுகையின் ஆணிவேர், நீதி, சட்டத்தின் ஆட்சியில் தான் உள்ளது. நம் நினைவுக்கு அப்பாற்பட்ட காலந்தொட்டு, இந்தக் கருத்து நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது.   இதே தாரக மந்திரம் தான், நமது சுதந்திரப் போராட்டத்திற்கு மேலும் வலிமை அளித்ததோடு, நமது அரசியல் சாசனத்திலும், அதனை உருவாக்கியவர்களால் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதுசட்டத்தின் ஆட்சி என்பது தான், அரசியல் சாசன முகப்புரையிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.   தற்போது, நமது நீதித்துறை, அரசியல் சாசன உணர்வுகளுக்கு வலிமை சேர்த்து, வழிகாட்டுவதோடு, இந்த நற்பண்புகள் தொடர்வது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமிதம் அளிக்கிறது.  

 

நீதித்துறை மீதான இந்த நல்லெண்ணம், சாமான்ய மனிதனின் உள்ளத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதோடுஉண்மையின் பக்கம் நிற்பதற்கான வலிமையை அளிக்கிறது.     நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, நாட்டின் நீண்ட நெடிய பயணத்தில் நீதித்துறையின் பங்களிப்பு பற்றி நாம் பேசும்போது, வழக்கறிஞர்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடுவது அவசியம்வழக்கறிஞர்கள் என்ற தூண் மீது தான் நமது நீதித்துறையின் செழுமையான பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது.   பல்லாண்டு காலமாக, வழக்கறிஞர்களும் நீதிபதிகளும், நம் நாட்டில் நீதித்துறையின் அடிப்படை நோக்கங்களை பூர்த்தி செய்து வருகின்றனர்.    நீதித்துறையின் நோக்கம் யாதெனில், நீதி என்பது நமது இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்பதோடு, நீதி என்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமை என்று நமது அரசியல் சாசனம் கூறுகிறது.   எனவே, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், உலகத்தரம் வாய்ந்த நீதித்துறையை உருவாக்குவது, நீதித்துறை மற்றும் அரசாங்கத்தின் கடமை ஆகும்.   நமது நீதித்துறையானது, சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கும் நீதி கிடைக்கச் செய்வதோடு, ஒவ்வொருவருக்கும் உரிய நேரத்தில் நீதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  

தற்போதுநீதித்துறையைப் போன்றே, அரசாங்கமும், அதன் கடமைகளை நிறைவேற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறது.    நாட்டின் ஜனநாயகமும், நமது நீதித்துறையும், நெருக்கடியான காலகட்டங்களிலும், இந்தியக் குடிமக்களின் நீதிக்கான உரிமையை பாதுகாத்துள்ளனஇதற்கு மிகச் சிறந்த உதாரணத்தைகொரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் காண முடிந்ததுஇந்த பெருஞ்சீற்றத்தின்போது, நாடு அதன் வலிமையை ஒருபுறம் வெளிப்படுத்த, மறுபுறம் நமது நீதித்துறையும், அதன் அர்ப்பணிப்பபை வெளிப்படுத்தியுள்ளனர்ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தொடக்க காலத்தில், குஜராத் உயர்நீதிமன்றம் காணொலிக்காட்சி வாயிலாக நடத்திய விசாரணைகள், எஸ்.எம்.எஸ். மூலம் வாய்தா கோருதல், மின்னணு முறையில் வழக்கு தாக்கல்  போன்ற சேவைகள் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதாக அமைந்தது.  ‘எனது வழக்கின் சேவையை மெயில்  செய்க’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டதோடு, நீதிமன்றத்தின் அறிவிப்புப் பலகையும் யூடியூப்பில் ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன், தினசரித் தீர்ப்புகள், நீதிமன்ற உத்தரவுகளும், இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டதுநமது நீதித்துறை எத்ததைகய சூழலையும் தாக்குப்பிடிக்கும் என்பதையும், நீதி வழங்குவதில் எத்தகைய விரிவான முயற்சிகளை மேற்கொண்டது என்பதையும் நிரூபித்துள்ளது.  

நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்த முதல் நீதிமன்றம் என்ற சிறப்பை குஜராத் உயர்நீதிமன்றம் பெற்றிருப்பதுடன், நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த வெளிப்படையான நீதிமன்றம் என்ற கருத்தும், குஜராத் உயர்நீதிமன்றத்தால் நனவாக்கப்பட்டுள்ளது.   நீதிமன்றம் எனப்படும் ஒருங்கிணைந்த இயக்கம் அடிப்படையிலான திட்டம், குறுகிய காலத்தில் நீதிமன்றங்கள் காணொலி வாயிலாக இயங்குவதற்குசட்டத்துறை உருவாக்கிய டிஜிட்டல் கட்டமைப்பு நமக்கு மனநிறைவு அளிப்பதாக உள்ளதுடிஜிட்டல் இந்தியா இயக்கம் தற்போது, நமது நீதித்துறையை அதிவிரைவில் நவீனப்படுத்தியுள்ளது

நாடு முழுவதும் தற்போது, 18,000-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளனகாணொலிக்காட்சி மற்றும் தொலைவிசாரணை நடைமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்கியதிலிருந்து, அனைத்து நீதிமன்றங்களிலும் மின்னணு முறையிலான விசாரணை உத்வேகம் பெற்றுள்ளது.    உலகிலேயே, காணொலிக்காட்சி வாயிலாக அதிக வழக்குகளை விசாரித்த ஒரே நீதிமன்றம் என்ற சிறப்பு, நமது உச்சநீதிமன்றத்திற்கு கிடைத்திருப்பது, மிகுந்த பெருமிதம் அளிக்கிறதுகோவிட் காலகட்டத்தில்நமது உயர்நீதிமன்றங்களும், மாவட்ட நீதிமன்றங்களும், அதிக அளவிலான வழக்குகளை காணொலிக்காட்சி வாயிலாக விசாரித்துள்ளன.   மின்னணு வழக்கு தாக்கல் முறை, நீதி எளிதில் கிடைக்கச் செய்வதில், புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.   அதேபோன்று, பிரத்யேக அடையாள எண் மற்றும் க்யூஆர் கோடு போன்றவை, தற்போதும் நமது நீதிமன்றங்களால் தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறதுஇந்த நடவடிக்கைகள், வழக்கு தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பெறுவதை எளிதாக்கியிருப்பதோடு மட்டுமின்றிதேசிய நீதித்துறை புள்ளிவிவரத் தொகுப்பிற்கும், வலுவான அடித்தளமிட்டுள்ளது.   இதுபோன்ற எளிய முறையில் நீதி கிடைக்கச் செய்வது, நமது குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை மேம்படுத்தியிருப்பதுடன்நாட்டில்தொழில் தொடங்குவதை எளிதாக்கும்முறையையும் மேம்படுத்தியுள்ளது.   இது, இந்தியாவில் தங்களது நீதிமன்ற உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை  அன்னிய முதலீட்டாளர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.   தேசிய நீதித்துறை புள்ளிவிவரத் தொகுப்பின் பணிகளைஉலக வங்கியும், 2018-ம் ஆண்டிற்கான தனது தொழில்முறை குறித்த அறிக்கையில் பாராட்டியுள்ளது.  

மாண்புமிகு நீதிபதிகளே,

உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு, தேசிய தகவல் மையத்துடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி, வருங்காலத்திலும், இந்தியாவில்,   ‘நீதி எளிதில் கிடைக்கச் செய்தல்‘  முயற்சியின் விரைவான வளர்ச்சியை உறுதி செய்து வருகிறது.   நீதிமன்ற நடவடிக்கைகளில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதுடன்நமது நீதித்துறையை எதிர்காலத்திற்கேற்ப தயார்படுத்துவது குறித்தும் ஆராயப்பட வேண்டும்.   செயற்கை நுண்ணறிவு, நீதித்துறையின் திறமையை மேம்படுத்தி விரைவுபடுத்தும்.   நாட்டின் சுயசார்பு இந்தியா இயக்கம், இந்த முயற்சிகளில் பெரும் பங்கு வகிக்கும்

தற்சார்பு இந்தியா இயக்கத்தின்கீழ், இந்தியாவின் சுய காணொலிக்காட்சி நடைமுறை,கள் ஊக்குவிக்கப்படுகின்றனநாட்டில் டிஜிட்டல் பிளவைக் குறைக்கவும்சாமான்ய மக்களுக்கு உதவும் வகையிலும்உயர்நீதிமன்றங்களிலும், மாவட்ட நீதிமன்றங்களிலும்  மின்னணு சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.   பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில்ஆன்லைன் லோக் அதாலத் எனப்படும் மின்னணு மக்கள் நீதிமன்றங்கள், புதிய இயல்பாக மாறி வருவதை நாம் அனைவரும் காணலாம்.   குஜராத்தின் ஜுனாகத்தில்  35-40 ஆண்டுகளுக்கு முன்பே, முதலாவது மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.   தற்போது, உரிய நேரத்தில், தகுந்த நீதியைப் பெறுவதற்கான மிகச்சிறந்த ஊடகமாக, மின்னணு மக்கள் நீதிமன்றங்கள் மாறியுள்ளன.   நாட்டிலுள்ள 24 மாநிலங்களில், மின்னணு மக்கள் நீதிமன்றங்களில், இதுவரை லட்சக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றுக்கு தீர்வும் காணப்பட்டு வருகிறது.   இந்த வேகமும், வசதிகளும், நம்பிக்கையும்தான், தற்போதைய தருணத்தில் நமது நீதித்துறையின் தேவையாக உள்ளது.  

மற்றொரு அம்சத்திலும், குஜராத்தின் பங்களிப்பு பெருமிதம் அளிக்கிறது.   மாலைநேர நீதிமன்ற நடைமுறையை முதலில் தொடங்கிய மாநிலமான குஜராத், ஏழைகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.   எந்தவொரு சமுதாயத்திலும்சட்டவிதிகள் மற்றும்  கொள்கைகளின் முக்கியத்துவத்தை விளக்குவதாக நீதித்துறை திகழ்கிறது.   நீதி மக்களிடையே நிச்சயத்தன்மையை ஏற்படுத்துவதோடுதளர்வுற்ற சமுதாயம் முன்னேற்றம் பற்றி சிந்திப்பதுடன், முயற்சிகள் வாயிலாகஉறுதிப்பாடுகள் மற்றும் முன்னேற்றத்தையும் முன்னெடுத்துச் செல்கிறது.    நமது நீதித்துறையும், மூத்த நீதிபதிகளும், நமது அரசியல் சாசனத்தின் நீதிமன்ற அதிகாரத்திற்கு தொடர்ந்து அதிகாரமளிப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்நீதித்துறையின் இந்த அதிகாரத்துடன், நம் நாடு முன்னேறிச் செல்வதோடுசுயசார்பு இந்தியா என்ற கனவும்நமது முயற்சிகள், கூட்டு அதிகாரம், மனோதிடம் மற்றும்  தொடர் நடைமுறைகளால் நனவாகும்.   இந்த நல்வாழ்த்துடன், வைர விழாவையொட்டி, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்பலப்பல பாராட்டுகள்!

நன்றி!  

                                                             *****