Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தின் ராஜ்கோட்டில் பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமரின் உரை

குஜராத்தின் ராஜ்கோட்டில் பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமரின் உரை


ராஜ்கோட் மக்கள் அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்?

 

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

 

சமீபத்தில், நவராத்திரியின் பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்தீர்கள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாட இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.தீபாவளிக்கான உங்களின் தயார் நிலை எப்படி இருக்கிறது?

உங்கள் தீபாவளி ஏற்பாடுகளை நான் ஏற்கனவே பார்க்கிறேன்.

இன்று, ராஜ்கோட் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி, விஜயதசமி பண்டிகைகள் முடிந்துவிட்டன, நீங்கள் ‘கர்பா’ விளையாடி களைத்துப் போயிருப்பீர்கள், ?

புத்தாண்டு நெருங்கி வருகிறது, சிறு வணிகர்கள் செய்ய வேண்டியது நிறைய உள்ளது, எனினும் ராஜ்கோட் இது போன்ற ஒரு பிரமாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. என்னை மிகவும் அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் வரவேற்று கௌரவித்ததற்காக ராஜ்கோட்டை வணங்குகிறேன்.    

ராஜ்கோட் உட்பட முழு சௌராஷ்டிராவிலும் இன்று நிறைவடைந்த பல திட்டங்களின் வடிவில் தீபாவளி பரிசுகளை உங்களுக்கு வழங்குகிறேன்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டங்களே ஒரு வகையில் புதிய தீர்மானங்களுக்கு அடித்தளமாக அமைகின்றன.

உலகின் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாட்டில் ஆறு இடங்களில் வீடுகள் கட்டுவதற்கான புதிய பிரச்சாரத் திட்டங்கள் தொடங்கப்பட்டது.

அதில் ஒன்று ராஜ்கோட்.

மேலும் இங்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1144 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துகள்.

தீபாவளியை ஒட்டி கட்டப்பட்ட உங்கள் வீடுகளில் லட்சுமி தேவி வாசம் செய்ய பிரார்த்திப்போம்.

 

என்னைப் பொறுத்தவரை ராஜ்கோட்தான் எனது முதல் பள்ளி.

மகாத்மா காந்தியைப் போலவே அவர் போர்பந்தரில் பிறந்து ராஜ்கோட்டில் பள்ளிப்படிப்பைப் பெற்றார் .

இதேபோல், நான் வடக்கு குஜராத்தில் பிறந்ததற்கு அதிர்ஷ்டசாலியாகவே கருதுகிறேன். எனது முதல்  அரசியல் ராஜ்கோட்டில் இருந்து தொடங்கியது.

ராஜ்கோட் நிலத்தின் சக்தியைப் பாருங்கள்.அது காந்திஜியை ஆசீர்வதித்தது, இன்று காந்திஜி நமக்கு ஒரு உத்வேகமாக மாறியுள்ளார்.

அதேபோல, நீங்கள் என்னை ஆசீர்வதித்து இரண்டு தசாப்தங்கள் ஆகின்றன, மேலும் எனது பொறுப்பு அதிகரித்து வருகிறது.

இது ராஜ்கோட்டின் ஆசீர்வாதங்களின் சக்தி.எங்கள் வாஜ்பாய் (வாலா) அவர்களுக்கு பின் நான் ராஜ்கோட்டுக்கு அனுப்பப்பட்டேன், நீங்கள் என்னை தத்தெடுத்தீர்கள்.

உங்களின் ஆசியுடன் தொடங்கிய இந்தப் பயணம் இன்று குஜராத்தின் வளர்ச்சியையும், நாட்டையும் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பாக மாறியுள்ளது.

ராஜ்கோட்டின் இந்தக் கடனை என்னால் ஒருபோதும் அடைக்க முடியாது.

நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்போது நான் உங்கள் மத்தியில் இருப்பதால், தலை வணங்கி, இந்த வளர்ச்சித் திட்டங்களை முழு அர்ப்பணிப்புடன் உங்களுக்கு வழங்குகிறேன் சகோதரர்களே.ஒரு மாணவனாக நான் உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

நான் நிறைய புரிந்துகொண்டேன், ராஜ்கோட் எனக்கு கற்றுக் கொடுத்தது இன்று நாட்டுக்கு பயனுள்ளதாக இருக்கிறது சகோதரர்களே.

 

அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை என்பது ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கான உத்தரவாதமாக மாறியுள்ளது.

மேலும் இதற்குப் பின்னால் மிகக் கடுமையான உழைப்பு இருக்கிறது.

இன்று நான் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் சகோதரர்களே.இந்த மாதிரியான முன்னேற்றத்தை தொடர்ந்து செய்து வருகிறோம்.

கடந்த சில தசாப்தங்களாக நமது குஜராத்தின் திறமையை பெறுவதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

 

அரசின் முயற்சியின் பலனாக இன்று குஜராத் அதிவேகமாக முன்னேறி வருகிறது.வளர்ந்த இந்தியாவுக்கு வளர்ந்த குஜராத், வளமான இந்தியாவுக்கு வளமான குஜராத் என்ற மந்திரத்தை நாங்கள் தொடர்ந்தோம்.

 

ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வேண்டும் என்ற ஆசை இருக்கும்.உங்கள் அரசு நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு சொந்த வீடு கட்ட பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வீடு, அதில் மகிழ்ந்து வாழக்கூடியதாக இருக்க வேண்டும்.

நவீன வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கழிப்பறைகள், மின்சாரம், தண்ணீர், எரிவாயு, இணையதள இணைப்பு, ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் போன்றவை இருக்க வேண்டும்.தனது கடின உழைப்பால் வறுமையில் இருந்து வெளிவரும் ஒரு சாதாரண மனிதன் குடும்பத்தில் யாருக்கேனும் நோய்வாய்ப்பட்டால் மீண்டும் வறுமையின் சுழலில் சிக்கிக் கொள்கிறான்.

 

இதை மனதில் வைத்து, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவை செயல்படுத்தினோம். இப்போது இந்தத் திட்டத்தின் கீழ், ஐந்து லட்சம் ரூபாய்க்கு இலவச சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

இந்த திட்டம் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைகிறார்கள் சகோதரர்களே.சகோதர சகோதரிகள்,

 

இன்று, ராஜ்கோட் மற்றும் குஜராத் முழுவதும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு பெயர் பெற்றுள்ளது.

பல வருடங்களுக்கு முன்பு நான் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது பேசியது எனக்கு நினைவிருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, மோர்பி, ராஜ்கோட் மற்றும் ஜாம்நகர் முழுவதுமே மினி-ஜப்பானாக மாறும் என்று நான் கணித்திருந்தேன்.

அப்போது மக்கள் என்னை கேலி செய்தனர்.

நீங்கள் சொல்லுங்கள் என் சகோதரர்களே, என் கணிப்பு உண்மையாகிவிட்டதா இல்லையா.

 

மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியின்படி, கடந்த எட்டு ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மக்களுக்கு மூன்று கோடிக்கும் அதிகமான சிறந்த வீடுகளை வழங்கியுள்ளோம்.

குஜராத்துக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட 10 லட்சம்  வீடுகளில், ஏழு லட்சம் வீடுகள் ஏற்கனவே மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ‌குஜராத்தில் உள்ள நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்ட 11,000 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம்.

 

நீங்கள் தன்னம்பிக்கை மற்றும் செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த எல்லா வேலைகளையும் நாங்கள் செய்கிறோம்.

நாம் எதைச் செய்தாலும் பல பரிமாண அணுகுமுறை உள்ளது.

ராஜ்கோட்டில் உள்ள இந்த லைட் ஹவுஸ் திட்டம், நமது சமூகத்தை சக்திவாய்ந்ததாக மாற்றுவதற்கும், சுதந்திர இந்தியாவின் கனவுகளை நிறைவேற்றுவதற்கும் நாம் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.ராஜ்கோட்டில் உள்ள இந்த லைட் ஹவுஸ் திட்டம் நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளது.

பொறியியல் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் பணிபுரிபவர்கள் உட்பட அனைவரும் ராஜ்கோட்டின் லைட் ஹவுஸ் திட்டத்தால் பயனடையப் போகிறார்கள்.

இதன் மூலம் லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமையும்.

உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்துவதன் மூலமும், முழு சௌராஷ்டிராவையும் இணைப்பதன் மூலமும் ராஜ்கோட்டின் விரைவான முன்னேற்றத்திற்கான திட்டங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

இன்று டிஜிட்டல் இந்தியா ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து வருவதைக் காணலாம்.

இன்று தெருவோர வியாபாரிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்கிறார்கள்.

இதுபோன்ற பல விஷயங்களை குஜராத்தில் பார்க்கலாம், அதன் பலன்களை குஜராத்தில் பெறுகிறோம் சகோதரர்களே.

அதுமட்டுமின்றி அதன் தாக்கமும் அதிகரித்து வருகிறது.

இங்கு தயாரிக்கப்படும் பம்புகள் மற்றும் இயந்திர கருவிகள் கிடைக்காத இடங்கள் நாட்டிலேயே இல்லை.  ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சக்தியை ராஜ்கோட் உருவாக்கியுள்ளது.இன்று இந்தியாவில் வளர்ந்துள்ள ஆட்டோமொபைல் துறைக்கான உதிரி பாகங்கள் ராஜ்கோட்டில் தயாரிக்கப்படுகின்றன.

குஜராத்தில் தயாரிக்கப்படும் ஒரு காரை ஜப்பான் இறக்குமதி செய்து அதன் உதிரி பாகங்கள் ராஜ்கோட்டில் தயாரிக்கப்பட்டது.  இதைவிட பெருமை என்ன வேண்டும்.

உலகில் நடக்கும் பீங்கான் வேலைகளில் 13 சதவீதம் மோர்பியில் மட்டுமே நடக்கிறது.

எனவே, மோர்பி சிறந்த ஏற்றுமதி நகரமாக அங்கீகரிக்கப்படுகிறது சகோதரர்களே.

தொழிற்சாலை எரிவாயு குழாய் பதித்து மோர்பிக்கு புதிய பலம் கொடுத்தோம்.

இன்று மோர்பியில் உள்ள செராமிக் பூங்காவிற்கு 15,000 கோடி முதலீடு என்பது பெரிய செய்தி.

கடந்த 20-22 ஆண்டுகளில் குஜராத்தில் பல்வேறு தொழில்களின் வளர்ச்சி பல நன்மைகளுக்கு வழிவகுத்தது.

பூபேந்திரபாய் அரசு அறிவித்துள்ள புதிய தொழில் கொள்கை, வரும் நாட்களில் புதிய தலைமுறையினருக்கும் பயனளிக்கப் போகிறது.சகோதர சகோதரிகள்,

பாரம்பரிய தொழில்களுடன், ராஜ்கோட், சவுராஷ்டிரா மற்றும் குஜராத்தில் பல வாய்ப்புகள் உருவாகின்றன சகோதரர்களே.

இந்த நம்பிக்கையுடன், மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நல்வாழ்த்துக்கள்..                

**************