Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தின் டாஹோட் மற்றும் பஞ்ச்மஹாலில் ரூ.22000 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்

குஜராத்தின் டாஹோட் மற்றும் பஞ்ச்மஹாலில் ரூ.22000 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்


டாஹோடில் இன்று பழங்குடி மக்கள் மகா சம்மேளன கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.22000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை  தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.  ரூ.840 கோடி மதிப்பில் நர்மதா நதிப் படுகையில் கட்டப்பட்டுள்ள டாஹோட் மாவட்ட தெற்கு பிராந்திய குடிநீர் விநியோகத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.  டாஹோட் பொலிவுறு நகரத்துக்கான ரூ.335 கோடி மதிப்புள்ள 5 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.  பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ், பஞ்ச்மஹால் மற்றும் டாஹோட் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பில் பழங்குடி மக்களுக்கு 10,000 வீடுகள் வழங்கப்பட்டன.

டாஹோட் உற்பத்திப் பிரிவில் 9,000 குதிரைத் திறன் உள்ள  மின்சார எஞ்சின்கள் உற்பத்திக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  இந்த திட்டத்தின் செலவு ரூ.20,000 கோடியாகும்.    இந்த திட்டத்தின்மூலம் 10,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.  ரூ.550 கோடி மதிப்புள்ள மாநில அரசு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ், திருமதி தர்ஷனா ஜர்தோஷ், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல், குஜராத் மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்ளுர் பழங்குடி சமூகத்துடனான தமது நீண்டகால தொடர்பை நினைவுகூர்ந்தார்.  நாட்டுக்கு சேவை செய்ய இவர்களின் ஆசிகள் ஊக்க சக்தியாக இருந்தன என்றும் அவர் கூறினார். ரூ.20,000 கோடி செலவில், 9,000 குதிரைத் திறன் உள்ள  மின்சார எஞ்சின்கள் உற்பத்திக்கு  அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பதன் மூலம்  இந்தியாவில் உற்பத்தி இயக்கத்திற்கு டாஹோட் பங்களிப்பு செய்யும்  என்று அவர் கூறினார். 

சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழா சூழலில் ஜாலியன் வாலாபாக் படுகொலைப் போன்ற டாஹோட் படுகொலை பற்றியும், உள்ளூர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்குமாறு கேட்டுக் கொண்ட பிரதமர், அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் பற்றி புதிய தலைமுறைகள் அறிந்து கொள்ள முடியும் என்றார்.   ஒரேஒரு அறிவியல் பள்ளி கூட இல்லாதிருந்த நாட்களோடு ஒப்பிட்டு இந்த பிராந்தியத்தின் தற்போதைய வளர்ச்சி பற்றி அவர் பேசினார்.  மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரிகள் அமைகின்றன, படிப்பதற்கு இளைஞர்கள் வெளிநாடு செல்கின்றனர்.  ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் நிறுவப்படுகின்றன.  பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.  என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.  தமது உரையின் நிறைவில் சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவையொட்டி இம்மாவட்டத்தில் 75 குளங்களுக்கான தமது வேண்டுகோளை அவர் வலியுறுத்தினார். 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818430

***************