குஜராத்தின் கெவாடியாவில் ரூ. 160 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (31-10-2023) தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஏக்தா நகரில் இருந்து அகமதாபாத் வரையிலான பாரம்பரிய ரயில், நேரடி நர்மதா ஆரத்தித் திட்டம் , கமலம் பூங்கா, ஒற்றுமை சிலைக்குள் நடைபாதை, 30 புதிய மின் பேருந்துகள், 210 மின் சைக்கிள்கள் கோல்ஃப் கார்ட் எனப்படும் வண்டிகள், ஏக்தா நகரில் நகர எரிவாயு விநியோக கட்டமைப்பு, குஜராத் மாநில கூட்டுறவு வங்கியின் ‘சகர் பவன்’ ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும், கெவாடியாவில் சூரிய சக்தி மையம் மற்றும் அவசர சிகிச்சை மையத்துடன் கூடிய துணை மாவட்ட மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக, தேசிய ஒற்றுமை தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
******
Release ID: 1973479
AD/PLM/KRS