Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கிரேக்க கல்வியாளர்களுடன் பிரதமர் சந்திப்பு

கிரேக்க கல்வியாளர்களுடன் பிரதமர் சந்திப்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.08.2023 அன்று ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்திய கல்வியியல், சமஸ்கிருதம் மற்றும் இந்தி பேராசிரியரான திரு டிமிட்ரியோஸ் வசிலியாடிஸ் மற்றும் ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் சமூக இறையியல் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் அப்போஸ்தலோஸ் மிகைலிடிஸ் ஆகியோரை சந்தித்தார்.

இந்திய மதங்கள், தத்துவம் மற்றும் கலாச்சாரம் குறித்த தங்கள் பணிகள் குறித்து அவர்கள் பிரதமரிடம் விளக்கினர்.

இந்திய மற்றும் கிரேக்க பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இந்திய-கிரேக்க கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதங்களில் கவனம் செலுத்தப்பட்டது.

******

ANU/AP/PLM/DL