Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கிரிஷி உன்னத்தி விழா – விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க உறுதி கொள்வோம்.

கிரிஷி உன்னத்தி விழா – விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க உறுதி கொள்வோம்.

கிரிஷி உன்னத்தி விழா – விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க உறுதி கொள்வோம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், விவசாயிகளின் வருவாயை 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என்று உறுதி கொள்ளுமாறு, விவசாயிகள், மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுகளை கேட்டுக் கொண்டார்.

இந்திய விவசாயம் குறித்த தனது உணர்வுகளை கிரிஷி உன்னத்தி விழாவில் கலந்து கொண்ட விவசாயிகளோடு பகிர்ந்து கொண்ட பிரதமர், இந்தப் பணி எளிதான பணி அல்ல ஆனால், அடையப்பட வேண்டிய இலக்கு என்றார்.

கிரிஷி உன்னத்தி விழா இந்தியாவின் விதியை மாற்றி அமைக்க வல்லது என்றார் பிரதமர். இந்தியாவின் எதிர்காலம், விவசாயத்தின் வளர்ச்சி, விவசாயிகளின் வளர்ச்சி மற்றும் கிராமங்களின் வளர்ச்சி ஆகியவற்றில் கட்டப்பட வேண்டும் என்றார் பிரதமர். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை, விவசாயத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் பிரதமர்.

விவசாயத் துறையில் அடுத்த புரட்சி தொழில்நுட்பம் மற்றும் நவீனமயமாக்கலின் மீது கட்டப்பட வேண்டும் என்ற பிரதமர், இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இதை செயல்படுத்துவதற்கான ஏராளமான சாத்தியக்கூறுகள் உண்டு என்றார். அரசு அந்த இலக்கை நோக்கியே பயணிக்கிறது என்றார் பிரதமர்.

விவசாயத்தில் செய்யப்படும் முதலீட்டு செலவை குறைப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க முடியும் என்பதை பிரதமர் விளக்கினார். மண் வள அட்டைத் திட்டம், பிரதம மந்திரி நீர்ப்பாசனத் திட்டம் போன்ற திட்டங்கள் இதை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டன என்றார்.

பயிர்கள் விளைவிப்பதோடு மேலும் சில பணிகளைச் செய்வதன் மூலம் விவசாய வருமானம் அதிகரிக்கும் என்றார் பிரதமர். பயிர்களை விதைப்பதோடு சேர்த்து, வயல் எல்லைகளில் மரங்களை நடுவதும், கால்நடைகளை வளர்ப்பதும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்றார் பிரதமர். இது போன்ற நடவடிக்கைகளால், விவசாயத்தில் நஷ்டமாகும் என்ற ஆபத்தை தவிர்க்கலாம் என்றார் பிரதமர்.

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களின் பயன்களை விளக்கிய பிரதமர், இத்திட்டம் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது என்றார். குறைந்த பட்ச ப்ரீமியம் தொகையில் அதிக பாதுகாப்பு என்ற வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர்.

முன்னதாக பிரதமர் கண்காட்சிகளை சுற்றிப் பார்த்தார். விவசாயத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் பல்வேறு தொழில்நுட்பங்களையும், பல அமைப்புகளின் பங்களிப்பையும், நவீன விவசாய இயந்திரங்களையும், கால்நடைகளையும் பிரதமர் பார்வையிட்டார்.

2014-15ம் ஆண்டுக்கான கிரிஷி கர்மான் விருதுகளை மாநிலங்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரதமர் வழங்கினார். கிசான் சுவிதா என்ற புதிய திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம், விவசாயிகள், வானிலை, சந்தை விலைகள், விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் மற்றும் விவசாய இயந்திரங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.


***