Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காஸாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


காஸாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;

“காஸாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இதய பூர்வமான இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.

தற்போது நடைபெற்று வரும் மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது கவலையளிக்கும் தொடர் விஷயமாகும். சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

***

ANU/PKV/SMB/AG/KPG