காஷ்மீரின் சிறந்த கலாச்சாரம், கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் விடாஸ்டா நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் சிறந்த கலாச்சாரம், கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக 2023 ஜனவரி 27 முதல் 30-ந் தேதி வரை விடாஸ்டா நிகழ்ச்சிக்கு கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி காஷ்மீரின் வரலாற்று சிறப்புமிக்க அடையாளத்தை மற்ற மாநிலங்களுக்கு விளக்கப்படுகிறது. இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற எழுச்சியின் அடையாளமாக திகழ்கிறது.
அமிர்தப் பெருவிழாவின் ட்விட்களுக்கு பிரதமர் ட்விட்டரில் பதிலளித்திருப்பதாவது;
“காஷ்மீரின் சிறந்த பாரம்பரியம், பன்முக தன்மை மற்றும் தனித்துவத்தை அனுபவிக்க ஒரு அருமையான முன்னெடுப்பு!”
***
(Release ID: 1894538)
IR/SMB/AG/KRS
कश्मीर की समृद्ध विरासत, विविधता और विशिष्टता का अनुभव कराती एक अद्भुत पहल! https://t.co/Dc7mDaAN39
— Narendra Modi (@narendramodi) January 29, 2023