Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்.

காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்.

காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்.


கட்ச், தோர்டோவில் நடைபெற்ற காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில், மூன்றாவது மற்றும் இறுதி நாளன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.

மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களின் சாரம் மற்றும் ஆழத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்ததாக குறிப்பிட்ட பிரதமர், இது காவல்துறையின் அர்ப்பணிப்பையும், திறனையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டார். இந்த மாநாட்டின் இறுதியில் வரும் பரிந்துரைகளை அமல்படுத்த ஒரு செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். நாடெங்கும் இருந்து வந்திருந்த இளைய மற்றும் மூத்த அதிகாரிகளிடையே நடைபெற்ற அந்த உரையாடல்கள், தடைகளை கடந்து குறிப்பிடத்தக்க இலக்கினை அடைய உதவியதாக குறிப்பிட்டார்.

காவல் பணியில் உணர்திறன் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மக்களை உணர்திறனோடு அணுக ஓர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். காவல்துறை சமூகத்தோடு நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், இதை அடைய, சமூகத்தின் வெற்றியை காவல்துறையும் கொண்டாட வேண்டும் என்றார். தங்கள் வெற்றிகளை கொண்டாடுவதற்காக காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள், காவல் அதிகாரிகளின் பணிகளை புரிந்து கொண்டு மரியாதை அளிப்பர் என்றார். சமூகத்தில் உள்ள மக்கள், காவல் நிலையங்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், சமூக வலைத்தளங்கள், ஆகியன குறித்து பேசிய பிரதமர், காவல்துறை அதிகாரிகள், புதிய தொழில்நுட்பங்களை தங்கள் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். பிற மாவட்டங்களோடும், பிற மாநிலங்களோடும், காவல்துறையினர் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். சுற்றுலா காவல்துறை, பேரிடர் மேலாண்மை மற்றும் காவல் பயிற்சி ஆகியன குறித்தும் பிரதமர் பேசினார்.

காவல்துறையினரின் தன்னலமில்லா சேவையை பாராட்டிய பிரதமர், அவர்களின் கடமை உணர்வு, தேசத்தின் பாதுகாப்பின் அடிப்படை என்றார்.
மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் விருதுகளை பிரதமர் வழங்கினார். முன்னதாக, காவல் பல்கலைக்கழகம், தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை அமைப்பது குறித்து அரங்கில் விவாதிக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் திரு கிரேண் ரிஜ்ஜிஜ்ஜு மற்றும் திரு ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி ஆகியோர் உடனிருந்தனர்.

***