Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கால்நடை வளர்ப்பு மற்றும் பால்பண்ணை துறையில் இந்தியாவுக்கும் டென்மார்க்குக்கும் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைக்கப்பட்டது


    கால்நடை வளர்ப்பு மற்றும் பால்பண்ணை துறையில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுக்கும் டென்மார்க்குக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்  இன்று (27.06.2018) எடுத்துரைக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 16.04.2018 அன்று கையெழுத்திடப்பட்டது.

    பால்பண்ணை மேம்பாடு மற்றும்  நிறுவனங்களை வலுப்படுத்துவது ஆகியவற்றில் தற்போதுள்ள அறிவு  அடித்தளத்தை விரிவாக்குவதை   கால்நடை வளர்ப்பு மற்றும் பால்பண்ணைத்துறை ஒத்துழைப்புக்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டது.

   இருதரப்பினரின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டுப்பணிக்குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் கூட்டுத்திட்டங்கள், ஒத்துழைப்பு, ஆலோசனைகள் மற்றும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும்.

       கால்நடை இனப்பெருக்கம், கால்நடை ஆரோக்கியம், பால்பண்னைத் தொழில், மாட்டுத்தீவன மேலாண்மை ஆகிய துறைகளில் அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் இந்திய கால்நடைகளின் உற்பத்தித்திறன் மேம்பாடு, பரஸ்பரம் அக்கறையுள்ள கால்நடை வர்த்தக விஷயங்கள் மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

——