Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘காலநிலை நிதியை மாற்றியமைத்தல்’ தொடர்பான சி.ஓ.பி-28 தலைமைத்துவ அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

‘காலநிலை நிதியை மாற்றியமைத்தல்’ தொடர்பான சி.ஓ.பி-28 தலைமைத்துவ  அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


மேதகு தலைவர்களே,

ஜி20 மாநாட்டின் கீழ், நிலையான வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டு தலைப்புகளுக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளித்துள்ளது.

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்என்பதையே எங்கள் ஆட்சியின் அடிப்படையாக்கினோம்.

கூட்டு முயற்சிகளின் மூலம், பல தலைப்புகளில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் நாங்கள் வெற்றி பெற்றோம்.

நண்பர்களே,

பருவநிலை மாற்றத்தில் இந்தியா உட்பட உலகளாவிய தெற்கில் உள்ள அனைத்து நாடுகளின் பங்கும் மிகக் குறைவு என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால் பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகள்  மிக அதிகம். வளங்கள் குறைவாக உள்ள போதிலும், இந்த நாடுகள் காலநிலை நடவடிக்கைக்கு உறுதிபூண்டுள்ளன.

உலகளாவிய தெற்கின்  விருப்பங்களைப் பூர்த்தி செய்ய காலநிலை நிதி மற்றும் தொழில்நுட்பம் இன்றியமையாதது. பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட வளர்ந்த நாடுகள் தங்களுக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என்று உலகளாவிய தெற்கு நாடுகள் எதிர்பார்க்கின்றன. இது இயற்கையானது மற்றும் நியாயமானது.

நண்பர்களே,

2030-ஆம் ஆண்டுக்குள் பருவநிலை நடவடிக்கைக்கு பல ட்ரில்லியன் டாலர் காலநிலை நிதி தேவை என்று ஜி-20 மாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

கிடைக்கக்கூடிய, அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையிலான காலநிலை நிதி.

ஐக்கிய அரபு அமீரகத்தின் காலநிலை நிதி கட்டமைப்பு முன்முயற்சி இந்த திசையில் உத்வேகத்தை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

இழப்பு மற்றும் சேத நிதியத்தை செயல்படுத்த நேற்று எடுக்கப்பட்ட வரலாற்றுச்  சிறப்புமிக்க முடிவை இந்தியா வரவேற்கிறது. இது சி.ஓ.பி 28 உச்சிமாநாட்டிற்கு புதிய நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது. காலநிலை நிதி தொடர்பான பிற தலைப்புகளிலும் சி.ஓ.பி உச்சிமாநாடு உறுதியான முடிவுகளைத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

முதலாவதாக, சி.ஓ.பி-28 காலநிலை நிதி, குறித்த புதிய கூட்டு அளவீட்டு இலக்கில் உண்மையான முன்னேற்றத்தைக் காணும். இரண்டாவதாக, பசுமை காலநிலை நிதி மற்றும் தகவமைப்பு நிதியில் எந்தக் குறைப்பும் இருக்காது, இந்த நிதி உடனடியாக நிரப்பப்படும்.

மூன்றாவதாக, பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் வளர்ச்சி மற்றும் காலநிலை நடவடிக்கைக்கு மலிவு நிதியை வழங்கும். நான்காவதாக, வளர்ந்த நாடுகள் நிச்சயமாக 2050 க்குள் தங்கள் கார்பன் தடத்தை அகற்றும்.

பருவநிலை முதலீட்டு நிதியம் அமைக்கப்படும் என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன், அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் நன்றி.

பொறுப்புத்துறப்பு – இது பிரதமர் அளித்த  பத்திரிகை அறிக்கையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும்.

 பத்திரிகை அறிக்கை இந்தியில் வழங்கப்பட்டிருந்தது.

*******

ANU/AD/RB/DL