Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காயமடைந்து லே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்


நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்துவதற்காக நான் இன்று வந்துள்ளேன். நீங்கள் மிகத் துணிச்சலுடன் போராடினீர்கள். நம்மை விட்டுப் பிரிந்த துணிச்சல் மிகு தீரர்கள் காரணமில்லாமல் செல்லவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு நான் கூறினேன். நீங்கள் அனைவரும் உரிய பதிலடி கொடுத்துள்ளீர்கள். நீங்கள், மருத்துவமனையில் இருப்பதால், 130 கோடி மக்கள் உங்களை எண்ணிப் பெருமிதம் கொண்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்களது துணிச்சலும், தீரமும் புதிய தலைமுறையினர் அனைவருக்கும் ஒரு எழுச்சியை, ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, உங்களது வீரமும், துணிச்சலும், இளம் தலைமுறையினருக்கு மட்டுமல்லாமல் நாட்டு மக்கள் அனைவருக்கும் நீண்டகாலத்துக்கு சிறந்த ஊக்கமாக இருக்கும். உலகம் தற்போதுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு, தீரமிக்க உங்களது வீரம் குறித்த செய்தி உலகத்தைச் சென்றடைந்துள்ளது. ஆற்றலுடன் நீங்கள் நின்ற விதத்தைக் கண்ட உலகம், யார் இந்த துணிச்சல் மிக்க வீரர்கள் ?, அவர்களது பயிற்சி என்ன?, அவர்களது தியாகம் எவ்வளவு உயர்ந்தது?, இந்த அர்ப்பணிப்பு எத்தகைய பாராட்டுக்குரியது? என அறிந்துகொள்ள விரும்புகிறது. உங்களது துணிச்சலைக் கண்டு உலகமே வியக்கிறது.

உங்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காகவே,
நான் இன்று இங்கு வந்திருக்கிறேன். உங்களைக் கண்டதுடன், உங்களைத் தொட்டதன் காரணமாக, நான் சக்தியுடனும், ஊக்கத்துடனும் திரும்பிச் செல்கிறேன். இந்தியா தன்னிறைவு பெறட்டும்; உலகின் எந்த சக்திக்கு முன்னாலும், இந்தியா தலைவணங்கியதில்லை. வருங்காலத்திலும், தலை வணங்காது!.

உங்களைப் போன்ற தீரமிக்க வலுவான நண்பர்கள் இருக்கின்ற காரணத்தால்தான் இதை என்னால் கூறமுடிகிறது. நான் உங்களை வணங்குகிறேன். அதேசமயம், தீரமிக்க உங்களை ஈன்று, வளர்த்து, நாட்டுக்காகப் போராட உங்களை அனுப்பி வைத்த உங்களது வீரத்தாய்மார்களையும் நான் வணங்குகிறேன்!. அவர்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் இல்லை.

நண்பர்களே, நீங்கள் விரைந்து குணமணைவீர்கள் என நான் நம்புகிறேன். இந்த ஒழுக்கமான சிந்தனை மற்றும் ஒத்துழைப்புடன் நாம் ஒன்றாக முன்னேறிச் செல்வோம்.

உங்களுக்கு நன்றி!