Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காம்பவுண்ட் வில்வித்தையில் தங்கம் வென்ற ஓஜாஸ் பிரவீன் தியோட்டலேவுக்கு பிரதமர் பாராட்டு


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காம்பவுண்ட் வில்வித்தை ஆடவர் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஓஜாஸ் பிரவீன் தியோட்டலேவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு :

“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காம்பவுண்ட் வில்வித்தை ஆடவர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற ஓஜாஸ் பிரவீன் தியோட்டலேவுக்கு வாழ்த்துகள். அவரது துல்லியத் தன்மை, உறுதி மற்றும் அசைக்க முடியாத கவனம் ஆகியவை மீண்டும் நம் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.”

***

ANU/PKV/PLM/DL